பக்கம் எண் :

397

5அளியை நீயே யாங்காகுவைகொல்
நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப்
புலவர் புகழ்ந்தபொய்யா நல்லிசை
விரிகதிர் ஞாயிறுவிசும்பிவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பிற்செம்பியர் மருகன்
10கொடிநுடங்கு யானைநெடுமா வளவன்
தேவ ருலக மெய்தின னாதலின்
அன்னோற்கவிக்குங் கண்ணகன் றாழி
வனைதல் வேட்டனை யாயினெனையதூஉம்
இருநிலந் திகிரியாப் பெருமலை
15மண்ணா வனைதலொல்லுமோ நினக்கே.

திணை - அது; துறை -ஆனந்தப்பையுள்.

அவனை ஐயூர் (பி - ம்.உறையூர்) முடவனார் பாடியது.

ஆனந்தப்பையுளாவது:-

“விழுமங் கூரவேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று” (பு. வெ. 226)

(இ - ள்.) அடுகலம்வனையும்வேட்கோவே (வேட்கோ - குயவன்) ! அடுகலம்வனையும் வேட்கோவே! இருள்நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற்போன்ற நிறமுடைத்தாய்த்திரண்ட மிக்கபுகை அகலிய பெரிய ஆகாயத்தின்கட்சென்று தங்கும் சூளையையுடைய அகலிய இடத்தினை யுடைய பழையஊரின்கட் கலம் வனையும் வேட்கோவே! இரங்கத்தகுவை; நீஎன்ன வருத்தமுறுவைதான்? நிலவெல்லையின்கண் பரப்பிய மிக்கபெரிய சேனையினையுடைய அறிவுடையோர் புகழ்ந்த பொய்யாதநல்ல புகழினையும் பரந்த சுடரினையுமுடைய ஆதித்தன்வானத்தின்கண் பரந்தா லொத்த சேய்மைக்கண்ணே விளங்கும்தலைமையையுடைய செம்பியர் மரபினுள்ளான், கொடிகள்நுடங்காநின்ற யானையினையுடைய மிகப்பெரிய வளவன்,அவன் தேவருடைய விண்ணுலகத்தை அடைந்தானாகலான்,அப்பெற்றிப்பட்டோனைக் கவிக்கும் இடமகன்ற தாழியை வனைதலை நீ விரும்பினாயாயின்எப்படியும் பெரிய நிலவட்டம் உருளியாகப் பெரிய மேருமலைமண்ணாக வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு-எ-று.

அடுக்குவிரைவின்கண் வந்தது.

கலஞ்செய்கோவே,வளவன் தேவருலகமெய்தினனாதலால், அன்னோற் கவிக்கும் தாழிவனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக மாமேருமண்ணாக வனைதலொல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை? நீஇரங்கத் தக்காயெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

இதுசுற்றத்தார் இரங்கிக் கூறுதலின், ஆனந்தப்பையுளாயிற்று.