(கு - ரை.) 1. மு. புறநா. 256 : 1. 11-2. புறநா. 238, 236, 364; ‘‘தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்” (மணி. 6 : 67) 12-4. ‘‘மாயிருந் தாழி கவிப்பத், தாவின்று கழிகவெற் கொள்ளாக் கூற்றே” (நற். 271 : 11 - 2) (228) 229 | ஆடிய லழற்குட்டத் தாரிரு ளரையிரவில் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக்கயங்காயப் | 5 | பங்குனியுய ரழுவத்துத் தலைநாண்மீ னிலைதிரிய நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாசிச் செல்லா தூசி முன்னா | 10 | தளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன் | 15 | நோயில னாயி னன்றுமற் றில்லென அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே மைந்துடை யானை கைவைத் துறங்கவும் திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும் | 20 | காவல் வெண்குடை கால்பரிந் துலறவும் காலியற் கலிமாக் கதியின்றி வைகவும் மேலோ ருலக மெய்தின னாகலின் ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ | 25 | பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க் களந்துகொடை யறியா வீகை மணிவரை யன்னமாஅ யோனே. |
திணையும் துறையும் அவை. 1கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்னநாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துக் கூடலூர் கிழார் பாடியது.
1.புறநா, 22 குறிப்புரை,
|