பக்கம் எண் :

400

படவென்றல் இன்னாமையிற் கைவைத்துறங்கவும்கண்கிழிந்துருளவும் கால்பரிந்துலறவும் கதியின்றி வைகவுமெனத்தகுதிபற்றிக் கூறப்பட்டன.

மாயோன்மகளிர்க்குறுதுணையாகித் தன்றுணையாயம் மறந்தனனோ?இல்லையோ? யாம் மறவா நிலைமையமாயினமென இரங்கிக்கூறியவாறு.

‘அஞ்சின மெழுநாள்வந்தன் றின்றென’ என்பதூஉம் பாடம்.

(கு - ரை.) 1.அழற்குட்டம் : ‘‘அழல்சேர் குட்டத் தட்டமி (சிலப். 23 : 134) ; ஆடு -மேடராசி; அக்கினியை அதிதேவதையாகவுடைமையின்கார்த்திகைக்கு அழலென்பது பெயராயிற்று. அசுவதியின் நான்குகால்களும், பரணியின் நான்குகால்களும், கார்த்திகையின்முதற்காலும் மேடராசிக் குரியன. பங்குனி மாதத்திற் கார்த்திகைநட்சத்திரம் உள்ள தினம் பூர்வ ஷஷ்டி அல்லது ஸப்தமியென்பது கணிதநூற்றுணிபாதலால், அத்தினத்தின் பாதியிரவுநிறைந்த இருளையுடையதாயிற்று.

3.அனுடத்தின் வடிவமாகிய ஆறு நட்சத்திரங்களின் தொகுதிவளைந்த பனைமரம்போன்ற தோற்றமுடைமையின் அதுமுடப்பனை யெனப்பட்டது; ‘அனுட மாறு முடப்பனை போலும்’என்பர்.

9. ‘பாசி, ஊசியென்பனமுறையே பிராசி, உதீசி யென்னும் வடமொழிச்சிதைவுகள்;உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன் அத்தமித்தலும் பின்எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு; ‘உச்சி மீனுக்கெட்டாமீனுதயமீன்என்பர்.

5 - 12. புறநா. 24 : 24 - 5;பங்குனிமாதத்தில் நட்சத்திரம் வீழின், இராசபீடைஎன்பர்; “ஆடு கயறே டனுச்சிங்கத் தெழுமீன் விழுமேலரசழிவாம்” என்பது சோதிடநூல்.

14. புறநா. 126 : 8, குறிப்புரை.

19. புறநா. 93 : 1.

22. புறநா. 213 : 10, 228 : 11, 249 : 11.

மு.பாடாண்டிணைத்துறைகளுள், ‘அச்சமு முவகையு மெச்ச மின்றி,நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும், காலங் கண்ணியஓம்படை’ என்பதற்கு மேற்கோள் (தொல். புறத்திணை. சூ. 30 இளம்.) ; ‘ஆடியலழற்குட்டத்து... ...மாஅயோனே : இதனுள், பாடாண்டலைவனதுநாண்மீனை வீழ்மீன் நலிந்தமைபற்றிக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 36, .)

(229)

230

கன்றம ராயங் கானத் தல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்
களமலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்