5 | வையகம் புகழ்ந்தவயங்குவினை யொள்வாட் பொய்யா வெழினி பொருதுகளஞ்சேர ஈன்றோ ணீத்த குழவி போலத் தன்னமர்சுற்றந் தலைத்தலை யினையக் கடும்பசி கலக்கியவிடும்பைகூர் நெஞ்சமொடு | 10 | நோயுழந்துவைகிய வுலகினு மிகநனி நீயிழந் தனையே யறனில்கூற்றம் வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான் வீழ்குடியுழவன் வித்துண் டாஅங் கொருவ னாருயி ருண்ணா யாயின் | 15 | நேரார்பல்லுயிர் பருகி ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே. |
திணை - அது; துறை -கையறுநிலை. அதியமான் தகடூர்பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது. (இ - ள்.) கன்றைமேவியஆனிரை மேய்ந்தகாட்டிடத்தே பிறி தொன்றால் ஏதமின்றிக்கிடப்பவும் சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்றகாலினையுடைய வழிபோவார் தாம்வேண்டியவிடத்தேதங்கவும் களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியேகிடப்பவும் எதிரில்நின்று தடுக்கும் பகையைத் துரந்தநிலங்கலங்காத செவ்விய ஆட்சியினையும் உலகத்தார் புகழ்ந்த விளங்கியபோரைச்செய்யும் ஒள்ளிய வாளினையும் தப்பாத மொழியினையுமுடையஎழினி பொருது போர்க்களத்தின் கண்ணே வீழப்,பெற்ற தாயால் கைவிடப்பட்ட உண்ணாத குழவியை யொப்பத்தன்னைமேவிய கிளை இடந்தோறும் இடந்தோறும் வருந்த மிக்கபசிவருத்திய கலக்கமுற்ற துன்பமிக்க நெஞ்சமோடு அவனைஇழந்து வருத்தமுற்றுக் கிடந்த உலகத்து விதனத்தினும்மிகப் பெரிதாக நீ இழந்தாய், அறமில்லாத கூற்றமே! வாழ்தலேதுவாக வரும்வயலிடத்து விளையும் வருவாயையறியானாய்த் தளர்ந்தகுடியையுடைய உழவன் விதையை உண்டாற்போல இந்த ஒருவனதுபெறுதற்கரிய உயிரை உண்டிலையாயிற் பகைவருடைய பலஉயிரையும் பருகி நிறைவை, அவன் போரிற் பகைவரைக்கொல்லும் களத்தின்கண்-எ - று. மன் :கழிவின்கண் வந்தது. உயிர் உண்ணவும் பருகவும்படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல், “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்,பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண். 1 - 2) என்றாற்போல 1ஓரணி குறித்து நின்றது.
1.ஓரணியென்றது,சமாதியென்னும் அலங்காரத்தை.
|