| 5 | வேளைவெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்றுவதியும் | | 10 | உயவற்பெண்டிரே மல்லே மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட்கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்ததாமரை | | 15 | நள்ளிரும்பொய்கையுந் தீயுமோ ரற்றே. |
(பி - ம்.) 4 ‘வாள்போந்தட்ட’,‘வாள்போழ்ந்தட்ட’ 6 ‘தடகிடைமிடைந்த’, ‘தடைகிடந்த’ திணை - அது; துறை -ஆனந்தப்பையுள். பூதபாண்டியன்றேவி பெருங்கோப்பெண்டுதீப்பாய்வாள்சொல்லியது. ஆனந்தப்பையுளாவது:- “விழுமங் கூரவேய்த்தோ ளரிவை கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று” (பு. வெ. 266) (இ - ள்.) பலசான்றவிரே!பலசான்றவிரே! நின் தலைவனோடு இறப்ப நீபோவென்றுகூறாது அதனைத் தவிர்கவென்று சொல்லி விலக்கும்பொல்லாதவிசாரத்தையுடைய பலசான்றவிரே! அணிலினது வரிபோலும்வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயைஅரிவாளால்அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்லவெள்ளிய நறியநெய்தீண்டாமல இலை இடையே பயின்றகையாற் பிழிந்துகொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத்திரளுடனே வெள்ளியஎள்ளரைத்த விழுதுடனே புளிகூட்டிஅடப்பட்ட வேளையில்வெந்த வேவையுமாகிய இவை உணவாகக்கொண்டு பருக்கைகளாற்படுக்கப்பட்ட படுக்கையின்கண்பாயும் இன்றிக் கிடக்கும்கைம்மைநோன்பால்வருந்தும் பெண்டிருள்ளேமல்லேம் யாம்;புறங்காட்டிகண்உண்டாக்கப்பட்ட கரிய 1 முருட்டால்அடுக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு அரிதாவதாகுக;எமக்கு எம்முடையபெரிய தோளையுடையனாகிய கொழுநன்இறந்துபட்டானாக,முகையில்லையாக வளவிய இதழ்மலர்ந்ததாமரையையுடையநீர்செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒருதன்மைத்து - எ - று. தில் :விழைவின்கண் வந்தது, எமக்குபொய்கையும்தீயும் ஒருதன்மைத்து; நுமக்கு அரிதாகுகவெனக்கூட்டுக, (கு - ரை.) 1. நன். சூ. 169, மயிலை.மேற்.
1 “வன்ப ராய்முருடொக்குமென்சிந்தை” (திருவா.) .
|