பக்கம் எண் :

421

4. ‘ அணில்வரிக் கொடுங்காய்எனப் புறத்தினுங் காட்டினராதலின், கொடுங்காயென்பதுபெயர்; வரி - அடை’ ( சிலப். 16 : 22 - 8, அடியார்.) ;குறில் செறியா ளகரம் வேற்றுமையில் வலிமுன்திரியாது இயல்பானதற்கு மேற்கோள்; நன். சூ.228, b; நன். வி. சூ. 229; இ. வி. சூ. 139, உரை.

8. “கலந்தவனைக் கூற்றங் கரப்பக்கழியா, தலந்தினையுமவ்வளைத் தோளி-உலந்தவன், தாரொடுபொங்கி நிலனசைஇத் தான்மிசையும், காரடகின் மேல்வைத்தாள்கை “ (பு. வெ. 257)

7-9. ‘துன்புறுவன என்றார், வெள்ளெட்சாந்தொடு........வதியும்: என்பதனை; இது புறம்‘ (சிலப்.18 : 34 - 6, அடியார்.)

11-5. தொல். இடை . சூ. 5, தெய்வச்.மேற்.

7 - 15. “காதல ரிறப்பிற் கனையெரிபொத்தி, ஊதுலைக் குருகினுயிர்த்தகத் தடங்கா,தின்னுயி ரீவ ரீயா ராயின், நன்னீர்ப் பொய்கையினளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயி னன்பரோ, டுடனுறைவாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்” (மணி. 2 : 42 -7)

மு. காஞ்சித்திணைத்துறைகளுள்,‘நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச், சொல்லிடையிட்ட மாலைநிலை’ என்பதற்கு மேற்கோள்;

தொல். புறத்திணை. சூ. 19, இளம்.;சூ. 24, ந.

(246)

247

யானை தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி
மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின்
5நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
10இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே.

(பி - ம்.) 6 ‘பேரமர்க்’ 10 ‘இன்னுயிர்நீங்குந்’

திணையும் துறையும் அவை.

அவள் தீப்பாய்வாளைக் கண்டு மதுரைப்பேராலவாயார்சொல்லியது.

(இ - ள்.) யானை கொண்டுவரப்பட்டஉலர்ந்த மரத்துவிறகால் வேடர் மூட்டப்பட்ட கடைந்துகொள்ளப்பட்டஎரியாகிய விளக்கினது ஒளியை யுடைத்தாகிய மடவியமானாகிய பெரியநிரை வைகிய உறக்கத்தை எழுப்பிமந்தி தூக்கும் அணங்குடைத்தேவியையுடைய முற்றத்துநீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில்வீழப் பெரிய துன்பமேவிய