பக்கம் எண் :

596

(கு - ரை.) 1. ஏர்தரும் - எழும்.2. குடம்பை - கூடு.

1 - 2. 'வெள்ளி தோன்றப் புள்ளுக்குர லியம்ப', 'மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர' (புறநா.385 : 1, 398 : 1)

3. கண்விழித்தன - மலர்ந்தன.

4. சுடர் ஒளி சுருங்கின்று - சந்திரன் ஒளிகுறைந்தது ; புறநா.398 : 1 5. இரங்குரல் - இரங்குகுரல்.

6. 'இரவுப்புறம் பெற்ற வேம வைகறை' (புறநா.398 : 6) ; 'இரவுத்தலைப் பெயரு மேம வைகறை' (மதுரைக். 686)

7. எஃகிருள் - குறைந்த இருட்டு. ஏமம் - இன்பம்.

8. கேளியர் - கேட்க.பலகோள் - பலவகை.

10. புறநா.374 : 6.11. நயந்து - விரும்பி.

13. குய் - தாளிப்பு.

15. கலிங்கத்திற்குப் பாம்பின் தோல் உவமம் ; 'அரவுரி யன்ன வறுவை நல்கி' (பொருந.83) ; கூரெயிற் றரவி னுரிவை யன்ன வானுண்டுகில்' (பாகவதம், 10 : கோவியர் துகில். 9) ; 'பாழிவா யரவினுரிநிகராடை' (இலிங்க. அம்பரீடனை. 56) ; 'அரவினுரியன்ன பட்டாடை' (வாயுசங். கிரியா. 13) ; 'பையரா வுரியி னன்ன நடைப்படாம்' (திருவிளை. திருமண. 147)

17. 'பொழிபெயல் வண்மையான்', 'சுரந்தவான் பொழிந்தற்றாச் சூழநின் றியாவர்க்கும், இரந்தது நசைவாட்டா யென்பது கெடாதோதான்' (கலித்.57 : 12, 100 : 11 - 2)

15 - 6. பொருந.82 - 7.

18. கலம் - ஆபரணம். 19. செறு - வயல்.21. தீ - வேள்வித்தீ.

22. தீவொன்றிற் பொன் உண்டாகுமென்பர்; 'பைம்பொன் விளைதீவினிதி தடிந்து', 'நன்பொன் விளை தீவமடைந் தஃதே' (சீவக.106, 503) 23. இறுதி - ஊழிக்காலம்.

24. கனலி - சூரியன்.

27. 'யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை' (புறநா.379 : 1)

(397)

398

மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர
வகைமா ணல்லிற்.........................................
பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப்
பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
5கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க
இரவுப்புறம்பெற்ற வேம வைகறைப்
பரிசிலர் விசையெ....................................................