| வரிசையினிறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகி னல்லதுபகைவர்க்குப் | 10 | புலியின மடிந்த கல்லளை போலத் துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர் மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி இரவுரை நெடுவா ரிப்ப வட்டித் துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய் | 15 | தள்ளா நிலையை யாகிய ரெமக்கென என்வர வறீஇச் சிறிதிற்குப் பெரிதுவந்து விரும்பிய முகத்த னாகி யெனதரைத் துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப் | 20 | புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை நிழல்காண் டேற னிறைய வாக்கி யானுண வருள லன்றியுந் தானுண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை | 25 | கொக்குகிர் நிமிர லொக்க லார வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு புரையோன் மேனிப் பூத்தசல......... முரைசெல வருளி யோனே................ | 30 | .........................யருவிப் பாயற் கோவே. | (பி - ம்.) 11 ‘துன்னலமபோகிய' 15 ‘நினையை' 16 ‘வறிய' 24 ‘மண்டை' 27 ‘முழாவுறழாரமொடு', ‘பிறையுறழாரமொடு' திணை - அது; துறை - கடைநிலை. சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார். (கு - ரை.) 1. புறநா.397 : 1. 2. வகைமாணல்லில்-கட்டுக்களால் மாட்சிமைப்பட்ட நல்ல வீடு. 3. வாரணம் - கோழி ; 'பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப' (மணி.7 : 116) 4. பூமுகை - மலரும் பருவமுள்ள அரும்பு. 6. புறநா.397 : 6, குறிப்புரை.
|