8. வரிசை - முறை. வஞ்சன் : இப்பாட்டுடைத்தலைவன் பெயர். 9. நகைவர்-நண்பர் ; புறநா. 373 : 35, குறிப்புரை. 11. துன்னல்போகிய - அணுகுதற்கரிய. 10 - 11. புறநா.54, மு. 9 - 11. புறநா.170 : 14 - 7.13. புறநா.399 : 25. 15. ஆகியர் - ஆகுக. என - என்று யான் கூற. 16. அறீஇ - அறிந்து. 20. 'புகைமுகந்தன்ன மாசி றூவுடை' (முருகு. 138) . உடீஇ - உடுத்தி. 25. புறநா. 395 : 36, குறிப்புரை. 27. 'அரவுற ழாரமுகக்குவ மெனவே" (புறநா. 368 : 18) (398) 399 | அடுமகண் முகந்த வளவா வெண்ணெற் றொடிமா ணுலக்கைப் பரூஉக்குற் றரிசி காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல் ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி | 5 | மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற் பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன மெய்களைந் தினனொடு விரைஇ....... மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல் | 10 | அழிகளிற் படுநர் களியட வைகிற் பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக் கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும் செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன் | 15 | நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக் கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ் பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண் டொருசிறை யிருந்தே னென்னே யினியே அறவ ரறவன் மறவர் மறவன் | 20 | மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன் இசையிற் கொண்டா னசையமு துண்கென மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி வள்பரிந்து கிடந்த........மணக்க விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை |
|