400 | மாகவிசும்பின் வெண்டிங்கள் மூவைந்தான் முறைமுற்றக் கடனடுவட் கண்டன்னவென் இயமிசையா மரபேத்திக் | 5 | கடைத்தோன்றிய கடைக்கங்குலாற் பலர்துஞ்சவுந் தான்றுஞ்சான் உலகுகாக்கு முயர்ெ..............க் கேட்டோ னெந்தையென் றெண்கிணைக் குரலே கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது | 10 | தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி மிகப்பெருஞ் சிறப்பின் வீறு.......... ..............................................லவான கலிங்க மளித்திட் டென்னரை நோக்கி நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து | 15 | போதறியேன் பதிப்பழகவும் தன்பகை கடித லன்றியுஞ் சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ மறவர் மலிந்தத................................. கேள்வி மலிந்தத வேள்வித் தூணத் | 20 | திருங்கழி யிழிதரு...........கலிவங்கம் தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்த்துத் துறைதொறும் பிணிக்கு நல்லூர் உறைவின் யாணர்......கிழவோனே. |
(பி - ம்.) 7 ‘உலகுக்காக்கும்’ 10 ‘சிதாறருஙகு’ 13 ‘மழித்ததோட்டென்னரை’, ‘மழித்ததொடடொனனரை’ 14 ‘நாரரித்தநறவமகிழ்ந்து’ 16 ‘தன்பகைக்கடிதல்’ 17 ‘பசிப்பகைக்கடிதல்’ 21 ‘யாறறசீத்துத்’ திணை - அது; துறை -இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார். (கு - ரை.) 1. மாகவிசும்பு - மாகமாகிய விசும்பு (புறநா.35 : 18) ; மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்திற்கும் நடு; பரி.1 : 47, பரிமேல். 2. மூவைந்து - பதினைந்துதிதி. 4. இயம் - வாச்சியம். இசையா - இசைத்து. 1 - 4. புறநா.393 : 20. 5. கங்குலின் கடையில். 8. குரலைக் கேட்டான்.14. தொல். இடை. சூ. 44, சே,; ந.மேற். 17. “பசிப்பிணிமருத்துவன்” (புறநா. 173 : 11) 19. வேள்வித்தூணம் - யூபத்தம்பம்; புறநா.15 : 21. புறநானூறுமூலமும் உரைவகையும் முற்றுப்பெற்றன.
|