ஆறாம் பதிப்பின் முகவுரை காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு. - திருவாசகம் எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய புறநானூற்றின் மூலமும் உரையும் எனது பாட்டனாராகிய டாக்டர் ஐயரவர்களால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் 1935-ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாகவும் எந்தையாரவர்களால் நான்காம் பதிப்பு 1950-ஆம் ஆண்டிலும் அச்சிடப்பெற்றன. இந்நூலின் அருமை பெருமைகளும், இந்நூலைப் பற்றிய செய்திகளும் இதன் பின்னே உள்ள முகவுரையால் நன்கு விளங்கும். ஐயரவர்களுடைய கைப் புத்தகங்களாலும் பலவகைக் குறிப்புக்களாலும் கிடைத்த திருத்தங்ளை இப்பதிப்பில் காணலாம். இப்பதிப்பு திருத்தமாக வெளி வருதற்கு சென்னை முத்தியா லுப்பேட்டை உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் திரு. புலவர் s. சீனிவாசன் அவர்கள் உதவி புரிந்தமைக்கு நன்றி பாராட்டுகின்றேன். சென்னை-5 24-12-62 | | இங்கனம் க. சுப்பிரமணியன் |
|