பக்கம் எண் :

604

திறப்பா டமைந்தவிப் புறப்பாட் டுக்கள்
தெய்வ வணக்கஞ் செய்யுமி னென்பவும்
அறத்தின் பகுதியை உறத்தெரிப் பனவும்
பாவ வழியை நீவனன் றென்பவும்
10 இம்மைப் பயனொடு மறுமைப் பயனைச்
செம்மையின் வகுத்துத் தெரிவிப் பனவும்
அந்தண ரியல்பைத் தந்துரைப் பனவும்
அரச நீதியை யுரைசெய் வனவும்
வணிக ரியல்பைத் துணிவுறுப் பனவும்
15 வேளாண் மாக்களின் றாளாண் மையினை
இயம்பு வனவும் வயம்புரி போர்க்கு
முந்துறு மரசரைச் சந்துசெய் வனவும்
ஒற்றுமைப் பயனைச் சொற்றிடு வனவும்
வீரச் சிறப்பை யாரத் தெரிப்பவும்
20 இல்லற மாகிய நல்லற முரைப்பவும்
துறவற மதனைத் திறவிதிற் றெரிப்பவும்
மிடித்துன் பத்தை யெடுத்துரைப் பனவும்
வண்மையுந் தண்மையு முண்மையுந் திண்மையும்
என்னு மிவற்றைப் பன்னுகின் றனவும்
25 அளியையு மொளியையுந் தெளிவுறுப் பனவும்
தம்மைப் புரந்தோர் தாமாய்ந் திடவே
புலவர்கள் புலம்பி யலமர றெரிப்பவும்
நட்பின் பயனை நன்கியம் புநவும்
கல்விப் பயனைக் கட்டுரைப் பனவும்
30 நீர்நிலை பெருக்கென நிகழ்த்து கின்றனவும்
மானந் தன்னைத் தாநன் குரைப்பவும்
இளமையும் யாக்கையும் வளமையு நிலையா
என்றே யிசைத்து நன்றேய்ப் பனவும்
அருளுடை மையினை மருளறத் தெரிப்பவும்
35 தரமறிந் தொழுகென் றுரனுற விதிப்பவும்
அவாவின் கேடே தவாவின் பென்பவும்
இனியவை கூற னனிநல னென்பவும்
உழவின் பெருமையை யழகுற வுரைப்பவும்
நன்றி யறிக வென்றிசைப் பனவும்
40 கொடுங்கோன் மையினை விடுங்கோ ளென்பவும்
தவத்தின் பெருமையைத் தவப்பகர் வனவும்
மடியெனும் பிணியைக் கடிமி னென்பவும்
கொலையெனும் பகையைத் தொலைமி னென்பவும்
நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த் தணந்து