45 | தாழ்வொன் றின்றி வாழ்மி னென்பவும் சுற்றம் புரக்கு நற்றிற முரைப்பவும் கற்பின் றிறத்தைக் கற்பிப் பனவும் மக்கட் பேற்றின் மாண்புரைப் பனவும் கணவனை யிழந்த மணமலி கூந்தலார் | 50 | தீப்பாய் செய்தி தெரிவிப் பனவும் கைம்மை விரத வெம்மை விரிப்பவும் இன்னும் பற்பல பன்னு வனவுமாய்ச் செப்புந ரெவர்க்கு மெய்ப்பிடை வைப்பாய் அரும்பெறன் மரபிற் பெரும்பயன் றருமே’ | என்று ஒருவாறு பொதுப்படத் தொகுத்துக் கூறுவதன்றி இன்ன பாடல் இத்தன்மையது இன்ன பாடல் இத்தன்மையதென்று தனித்தனியே எடுத்துக்காட்டி இவற்றின் அருமை பெருமைகளைச் சீராட்டிப் பாராட்டுதற்கு ஒரு சிறிதும் வல்லேனல்லேன். இச்செய்யுட்கள் நூலாசிரியர் பலருடைய உள்ளத்தையும் உரையாசிரியர் பலருடைய உள்ளத்தையும் தம்வயமாக்கி அவற்றைத் தமக்கு முழுமணிப் பீடிகையாகக் கொண்டு வீற்றிருந்தன வென்பதை, அவரவர் அருளிச்செய்த நூல்களும் உரைகளும் இவற்றின் சொன்னடை பொருணடைகளை இடையிடையே பெரும்பாலும் தழுவியிருத்தலே தெளிவாகப் புலப்படுத்தும். எனக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளுள் ஒரு பிரதியின் தொடக்கத்தில் ‘அறநிலை’ என்று வரையப் பெற்றிருந்தது. அப்படியே பொருள்நிலை, இன்பநிலை என்ற பகுதிகள் எந்த எந்தப் பாடலிலிருந்து தொடங்குமோ வென்று தேடிப் பார்த்ததில் ஒரு பிரதியிலும் கிடைக்கவில்லை; ஆனாலும் இந்நூல் அறநிலை, பொருள்நிலை, இன்பநிலை என்னும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப் பெற்றிருக்க வேண்டுமென்பது இதனால் ஊகித்தறியப் படுகின்றது. இந்நூற்கு இலக்கணம் அகத்தியமும் தொல்காப்பியமுமே யென்பதும் இதில் ஒவ்வொரு பாட்டின் பின்னும் எழுதப்பட்டுள்ள திணையும் துறையும் அவ்வப்பாட்டிற்கு ஏற்றனவல்ல வென்பதும் நச்சினார்க்கினியர் கருத்து; இது, ‘தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமும் தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப்பொருளாகத் துறை கூறவேண்டு மென்றறிக’ என்று தொல்காப்பியப் புறத்திணையியலில், “கொடுப் போரேத்தி” என்னும் சூத்திர வுரையில்
|