பக்கம் எண் :

606

எழுதியிருத்தலாலும் மேற்கூறிய புறத்திணையியலுரையில் இந்நூற்பாட்டுக் களுட் சிலவற்றை வேறு திணை துறைகளுக்கு உதாரணமாகக் காட்டி அவர் மறுத்தலாலும் துணியப்படும்.

கிடைத்த பிரதிகளுள் ஒன்றிலேனும் இந்நூல் 267, 268-ஆம் பாடல்களின் மூலமேனும் உரையேனும் காணப்படவில்லை.

இந்நூற்குக் கிடைத்த உரை பதப்பொருளை இனிது விளக்கி உரிய இடங்களிற் சொற்களை முடித்துக் காட்டி இலக்கணக் குறிப்பையும் திணைதுறைகளையும் ஆங்காங்குள்ள பழமொழிகளையும் அணியையும் சொன்னயம் பொருணயங்களையும் புலப்படுத்துவது; இவ்வுரையில் இக்காலத்து வழங்காத சொற்கள் பலவுள்ளன. அன்றியும், இதன் இடையிடையே சிற்சில வாக்கியங்கள் அவ்வவ்விடத்திற்குப் பொருத்தமில்லா தனவாகத் தோற்றும். அவற்றைச் செவ்வை செய்துகொள்வதற்கு இப்பொழுது தக்க சாதனம் கிடையாமையாலும் இனி நல்லபிரதிகள் கிடைப்பின் அவற்றைக்கொண்டு செவ்வை செய்து கொள்ளலாமென்றும் அவற்றை மாற்றாமற் பிரதிகளிலிருந்தவாறே பதிப்பித்தேன். இவ்வுரை இந்நூலின் முதல் இருநூற்றறுபத்தாறு பாடல்களுக்கு மட்டுமே கிடைத்தது; மேலுள்ள பாடல்களுக்கு ஒரு பிரதியிலும் கிடைத்திலது; 243-ஆம் பாடலுக்கு மேற்பட்டுள்ள சிலவற்றின் உரை இடையிடையே சிதைந்து மாறியிருக்கிறது.

இந்நூலுரையாசிரியர் மேற்கோளாக எடுத்துக் காட்டிய நூல்கள் தொல்காப்பியம், கலித்தொகை, குறுந்தொகை, சீவகசிந்தாமணி, பெரும்பாணாற்றுப்படை என்பன. இவ்வுரையாசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. இவர் சில பாடல்களின் விசேட வுரையிலெழுதும் சில செய்திகள் இந்நூற்குப் பழைய உரை ஒன்று உண்டென்பதைக் குறிப்பிக்கின்றன. அவ்வுரை இப்பொழுது கிடைக்கவில்லை.

(9) -ஆம் பாட்டின் விசேடவுரையில் இவர், ‘யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று; அன்றி முன்னீரென்றோதி, நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப’ என்று முந்நீர், முன்னீர் என்பவற்றின் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றார். சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் இவ்விரண்டு காரணங்களையும் மறுத்து, ‘முந்நீர் - கடல்; ஆகுபெயர்; ஆற்று நீர் ஊற்று நீர் மேனீரென இவை