வழக்கங்கள்:- அரைத்த மண்ணால் மதிலமைத்தல், அவலை வாயிலடக்கிக்கொண்டு நீந்துதற்கு மடுவிற்பாய்தல், ஆகுதிசெய்தல், ஆபரணங்களில் அருப்புத்தொழிலமைத்தல், ஆம்பலிலையால் மதுவை யுண்ணல், ஆம்பற்கொடியை வளையாக அணிதல், ஆயுதங்களுக்கு நெய் பூசிப் பீலியணிந்து மாலைசூட்டல், ஆறலைத்தல், இசைகேட்போர் தலையசைத்தல், இறந்தவர்க்குப் பிண்டோதகக் கிரியை செய்தல், இறந்தவருடம்பைச் சுடுதல், உடலை வெறுத்துத் துறக்கவிரும்பினோர் வடக்கிருத்தல், உடன்கட்டையேறல், உடைப்பை மீனாலடைத்தல், உப்பு முதலிய பண்டங்களை வண்டியிலேற்றிக் கொண்டுபோய் விற்றல், ஊர்காப்பாளர் பறையறைந்து கொண்டு விளக்குடன் யாமந்தோறுஞ் சென்று ஊரைக்காத்தல், ஊர்ப்பொதுவிடத்திற் பரிசிலர் தங்கல், கடாவடித்தல், கடாவிடல், கடிமரந்தடிதல், கழற்கனியாற் கூந்தலை வகிர்தல், கள்ளையுண்டோர் புளிச்சுவையை விரும்பல், களம் வேட்டல் (களவேள்விசெய்தல்) , களவேள்வியிற் கூழை இடந்துழந்தடுதல், களைகளைதல், காலையில் மதுவை யுண்ணல், காவதற்குத் தீயிடல், குதிரையை இடவாய் வலவாய் செலுத்தல், குழந்தைகளுக்கு அம்புலி காட்டல், கைம்மை நோன்பு நோற்றல், கோலாற் கடைந்து விறகில் நெருப்பெடுத்தல், சூதாடுதல், சூளுறல், தயிர்கடைதல், தருப்பைப்புன்மேல் பிண்டம் வைத்தல், தருமவோடம்விடுதல், தாளித்தல், தாளியடித்தல், தாளைப்பாடல், தானியங்களைக் குத்தல், தீவேட்டல், தூய்மை இல்லாமகளிர் கலந்தொடாமை, தெய்வ ஆவேசமுற்று மனிதர் ஆடுதல், தைத்தல், நல்லவேளைபார்த்துப் புறப்படல், நாட்கடாவழித்தல், நாட்சோறளித்தல், நீரில் மூழ்கி மண்ணெடுத்தல், நீலமணியை உச்சியில் தரித்தல், நெய்யை உலையாக வைத்தல், நெல் உகுத்துக் கடவுளைப் பரவுதல், நோயாலிறந்த அரசருடம் பைத் தருப்பையிற் கிடத்தி வாளாற் பிளத்தல், பகைவரிடமிருந்து கவர்ந்த பசுக்களைப் பொதுவிடத்தில் நிறுத்தல், பகைவருடைய அரணிற் கொண்ட பொருள்களைப் பரிசிலர்க்குக் கொடுத்தல், பன்னாடையாற் கள்ளைவடித்தல், பனங்குருத்தில் வேங்கைப்பூவை வைத்துத் தொடுத்தல், பாலில் உறையைத் தெறித்தல், பிணத்தைத்தாழியாற்கவித்துப் புதைத்தல், புதிதுண்ணல், புறத்திணைக்குரிய பூக்கள் பொன்னாற் செய்யப்படல், புறத்திணைக்குரிய பூக்களைக் காலத்திற் பறித்தல் அல்லது வாங்கிக்கோடல், பெண்டிர் பருத்திநூற்றல், பொதுவிடத்துள்ள வேப்பந் தளிரைச் சூடல், போர்க்களத்தைத் தமதாக்கிக்கோடல், போர்க்குச் செல்வோர் கயத்தில் மூழ்கிச் செல்லல், மணியை ஒப்பமிடல், மருந்திற்காக மரங்களிலிருந்து பாலெடுத்தல், மழையின்பொருட்டுத் தெய்வத்திற்குப் பலிதூவுதல், மன்றத்திற் பாணர் முதலியோர் முழவைக் கட்டுதல், யானைக்குப் பூணணிதல், யானையின்மீது கொடியெடுத்தல், யுத்தத்தில் இமைத்தவர் முதலியவரோடு போர்செய்யாமை, வஞ்சிபாடல், வயாவுற்ற மகளிர் மண்ணுண்ணல், வாழையிலையிலுண்டல், வீரமுரசை நீராட்டல், வெறியாடல், வேட்டையாடல், வேலுக்குப் பீலியணிதல்.
|