கழிப்பிணிப்பலகை, கற்பகச்சோலை, காம்பு, காமரம், காவற்பெண்டு, காவன்மரம், கிணைப்பறைக்கோல், கிளியீடு, குப்பி, குப்பை, குயவன்சக்கரம், குரல்நரம்பு, கூடு, கைகவரிரும்பு, கொங்கர், கொளுத்து, கொற்றக்குடை, கோல், சக்கரவாளசக்கரவர்த்திகள், சங்கிலி, சித்திரம், சிறுகாடு, சிறுதூறு, சுவர், சுள்ளி, சுளகு, சூடு, சூரபன்மா, சூளை, செருப்பு, சேமவச்சு, தலையடுப்பு, தலையாட்டம் (உளை) , தவம், தாள்நிழல், திறை, தீக்கடைகோல், தூண், தூண்டில், தேர் மொட்டு, தொடிமாணுலக்கை, நடுகல், நரம்பு (தந்தி) , நல்வினை, நாய் (சூதாடுகருவி) , நாராசம், நிறைக்குளப்புதவு, நீலக்கச்சை, நுகம், நூலிழை, நெற்கூடு, நெற்சூடு, நெற்பொலி, நெற்போர், பஞ்சு, படஞ் செய்பந்தர்க்கல், படப்பை, படமடை, படுக்கை, பரிசம், பருக்கைக் கல், பறவைக்கூடு, பன்னாடை, பனிச்சை, பனைப்போழ், பா, பாடை, பாதகம், பாய், பாய்மரம், பின்படை, புலிநிறக்கவசம், புலிப்பொறி, புறச் சமயத்தோர், பூணூல், பொற்றைக்கல், மடல், மத்து, மலைத்தாரம், மறுபிறப்பு, மார்பிற் செம்பொறி, மாலைப்பந்து, மிளகுமூடை, மீப்பாய், முட்டை, முரசடிக்குங் குறுந்தடி, முருக்கமர இலக்கம், முருகன் யானை, முன்படை, முனிவர், மூதிற்பெண்டிர், மேழி, யாகபத்தினி, யாகம், யானைக்கம்பம், யானைத்தந்தத்தாற் செய்யப்பட்ட துலாக்கோல், யானைத் தந்தப்பூண், யானைமணி, யூபத்தம்பம், வண்டிப்பார், வலை, வளைமுறி, வன்னித்துடுப்பு, வார், வாழைப்பூ, விமானம், விளக்கு, வீரச்செல்வம், வேணாவியோர், வேலுறை. உரையின் இயல்பு முகவுரையில் தெரிவித்தபடி புறநானூற்றிற்கு உரை இயற்றிய ஆசிரியர்பெயர் முதலிய வரலாறுகளில் ஒன்றும் கிடைக்கவில்லை. இவரைப் பற்றி அறிந்துகொள்ளுதற்குக் கருவியாக இருப்பது இவருடைய உரை ஒன்றே. இவருடைய உரைநடையின் அமைதியும் உரை நயமும் இலக்கணம் கூறும் திறமும், பிறவும் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் முதலியவர்களுடன் ஒப்பக்கருதும் அறிவுடையவராக இவரைப் புலப்படுத்துகின்றன. தமிழ் நாட்டின் பண்டைக்கால வரலாறு களையும் தமிழர் ஒழுக்கம் முதலியவற்றையும் அறிவிக்கும் கருவூலமாகிய இந்நூலுக்கு உரைவகுக்கப் புகுந்ததொன்றே இவர் பேராற்றலுடையார் என்பதைப் புலப்படுத்தும். ஆற்றொழுக்காகச் செய்யுளிற் சொற்கிடக்கை அமைந்தவாறே பொருள் கூறிச்செல்லுதலும், எளியநடையில் உரைவரைதலும், பிறரைக் கண்டியாமல் அவர்கள் கூறும் பலதிறப்பட்ட பொருள் வேறுபாடுகளையும் எடுத்துக் கூறுவதும், இன்றியமையாதவற்றைமட்டும் சுருக்கமாக உரைப்பதும், விளங்கும் பொருட்டு வினைமுடிவு காட்டுதலும் இவ்வுரையாசிரியருடைய சிறப்பியல்புகள். இவருடைய உரை பதவுரையாக விளங்குகின்றது.
|