பக்கம் எண் :

682

மயக்கத்தை, ‘இராச்சிய பாரத்தைப் பொறுத்து நடத்துமாறு நோக்கி நோன்பகட்டோடு உவமித்தமையின், இறப்ப இழிந்த ஆனந்த உவமை அன்றாயிற்று’ என்பதனாற் போக்குகின்றனர். சோழன் நலங்கிள்ளியின் பாட்டில் (73) “மெல்ல வந்தெனல்லடி பொருந்தி” என்னும் பகுதியில் தனதடியைத் தானே நல்லடியென்று சொல்லுதல் தற்புகழ்ச்சி யென்னும்
குற்றமாமோ என்னும் மயக்கத்தை, ‘1தன், மேம்பாடு கூறுகின்ற இடமாதலின், நல்லடியென்பது தற்புகழ்தலென்னும் குற்றமாகாது’ என்று அகற்றுகின்றார். “மூவரு ளொருவன்றுப்பா கியரென, ஏத்தினர் தரூஉங் கூழே” (122) என்றவிடத்து ஒருவன் என்ற ஒருமையும் ஏத்தினரென்னும் பன்மையும் பொருளொடு பொருந்துமாற்றை, ‘ஏத்தினர் தரூஉமென்று பன்மையாற் கூறியது, அவ்வேந்தன் அமைச்சரை; மூவருள் யான் ஒருவன், எனக்குத் துப்பாகியரென அம் மூவரும் ஏத்தினர் தரூஉமென்று உரைப்பினும் அமையும்’ என்று தெளியவைக்கின்றார். “பயனின் மூப்பிற் பல்சான்றீரே” (195) என்றதில் பயனின்மூப்பு என்னும் இழிவுக்கு மாறாகச் சான்றீரென்றிருத்தல் பொருந்துமோ என்னும் ஐயுறவை, ‘பயனின்மூப்பென்று வைத்துப் பல்சான்றீரேயென்றது இகழ்ச்சிக் குறிப்பு’ என்று போக்குகின்றார். “காலன புனைகழல்” (100) என்றதில் காலன என்னும் பன்மைக்கு வகை, ‘காலன புனைகழல் என்பது வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்தொறும் வென்று கட்டினவெனவுமாம்’ என்று புலப்படுத்துகின்றார். பிட்டங்கொற்றனை வாழ்த்தவந்த வடமவண்ணக்கன் தாமோதரனார், “மாறுகொண் மன்னரும் வாழியர் நெடிதே” (172) என்று அவன் பகைஞரையும் வாழ்த்துதல் முரண் பாடுடையதுபோலத் தோற்றி மயக்கம் தருதலை, ‘மாறுகொண் மன்னரும் வாழியரென்ற கருத்து: இவன் வென்று திறைகொள்வது அவருளராயி னென்பதாம்’ என்பதனால் தெரிவிக்கின்றார்.

சொல்வருவித்துரைத்தல்

அங்கங்கே துறைப்பொருளொடு பொருந்தும்பொருட்டும் பொருள் முடிபின்பொருட்டும் ஒருசொல் வருவித்து முடிப்பர்:-

‘வாழ்த்தியலாதல் விளங்க, வேண்டுமென ஒருசொல் தந்துரைக்கப் பட்டது’ (3) , ‘கொளீஇ யென்னுமெச்சம் அமைத்தவென்னும் ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது’ (14) , ‘செரீஇயென்னும் வினையெச்சத்தை ஆடுமென ஒருசொல் வருவித்து அதனோடு முடிக்க’ (22) ‘செய்யென ஒருசொல் வருவித்து உரைக்கப்பட்டது’ (44) முதலிய இடங்களைக் காண்க.

வகுத்துக் கூறல்

செய்யுளிற் கூறப்படும் பொருள்களை இன்னவை இன்னவற்றைச் சார்ந்தனவென்று வகுத்து எளிதிலறியும்படி கூறுவர்:-


1. நன். சூ. 53.