பக்கம் எண் :

683

‘நகர்வலஞ்செயற்குப்பணியியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுகவென அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று’ (6) ‘கழறைஇய வல்லாளனென்றதனாற் பகையின்மையும், ஒருபிடி படியுஞ் சீறிடமெழுகளிறு புரக்கும் நாடுகிழவோயென்றதனாற் பொருட் குறைவின்மையும் கூறியவாறாயிற்று’ (40) ‘உற்கமுதலிய நான்கும் உற்பாதமாய் நனவிற் காணப்பட்டன; எயிறு நிலத்து வீழ்தல் முதலாயின கனவிற் காணப்பட்டன,

கூற்றுவிளக்கல்

இன்னாரால் இன்ன காலத்தில் இது கூறப்பட்டதென்று விளக்குவர்:-

‘தாம் நினைந்த நினைவு எவ்வண்ணமாவதென்று தம் நெஞ்சொடு கூறிப் பின் பொலிக நும்புகழேயென அவ்வரசர் கிடந்தவாறு கண்டு கூறியவாறு’ (62) , ‘உளையக் கூறியதனைத் தம்மிடமிருந்து கூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத்து எதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க’ (72) , ‘இது, பரிசில்பெறப் போகின்றான் வருகின்றவரைக்கண்டு வினவுவான் பண்ணனது இயல்பு கூறிவாழ்த்தியவாறு’ (173) , ‘இவன் நிரைகொள்ளச் செல்கின்றமை கண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது’ (258)

குறிப்பாலறிந்த பொருள்

அகப்பொருட்செய்யுட்களுக்கு உரைவகுக்கும் உரையாசிரியர்கள் உள்ளுறையுவமமாகவும், இறைச்சிப்பொருளாகவும் அறிந்து கூறும் பொருளைப்போன்று பாட்டிற் காணப்படும் இன்ன சொற்களின் குறிப்பினால் இன்னபொருள் தோற்றுகின்றதென்றும், இன்ன நயம் புலப்படுகின்றதென்றும் இவர் எழுதிச்செல்லும் இடங்கள் மிக்க இ்ன்பத்தை உண்டாக்கும்.

‘கலை புலிப்பாற்பட்டெனச் சிறுமறி தழீஇய மடப்பிணை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம்புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்துபடாது அடகு தின்று உயிர்வாழ்கின்றாரென்பதோர் பொருள் தோன்றநின்றது’ (23) , ‘நின்மலையிற் குறவர்மாக்கள் கடவுட் பேணி மழைவேண்டிய பொழுது பெற்றுத் தாம் வேண்டுமுணவு நுகருமாறுபோல் இவளும் நின் அருள்பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டுமென்பதொரு நயந்தோன்ற நின்றது’ (143) ‘மடத்தகைமாமயில் பனிக்குமென்றருளிப் படாஅ மீத்த..........பேக என்ற கருத்து: இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள் பண்ணுகின்ற நீ நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளா தொழிதல் தகாதென்பதாம்’ (145) , 1‘பலவின் கனிகவர்ந்துண்ட கடுவன் மந்தியோடு சிறந்து சேண்விளங்கிக் கழைமிசைத்


1.திருச்சிற். 99