துஞ்சுமென்றதனால், நீயும் இவரை வரைந்து கொண்டு இன்புற்று வாழ்தல் வேண்டுமென்பது தோற்றி நின்றது’ (200) , ‘வேங்கைவீ தாயதுறுகல் இரும்புலி வரிப்புறங்கடுக்கு மென்ற கருத்து: ஏதம்செய்யாததூஉம் ஏதம்செய்வது போலக் கண்டார்க்கு அச்சம்வரத் தோன்றுமென்றமையான், இதுவும் இகழ்ச்சி தோன்ற நின்றது’ (202) . வரலாற்றுச் செய்திகள் சில இடங்களில் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை இவர் கூறுகின்றார்:- ‘தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினாளெனவுங் கூறுவாருமுளர்’ (11) என்று பேய்மகள் இளவெயினியின் வரலாறொன்றைப் புலப்படுத்துகின்றார். ‘புட்பகையென்பது இவனுக்கு ஒரு பெயர்’ (68) எனச் சோழன் நலங்கிள்ளியைப் பற்றிக் கூறுகின்றார். ‘என்றது, தந்தையுடன் வெறுத்து போந்தான் அமருட் புகுந்து இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான்; விரும்பாவிடின் அஞ்சுகின்றானென்பதாம்’ (81) என்று சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியைப் பற்றிக் கூறுகின்றார். ‘பூவார்கா-வானோர் இவன் முன்னோர்க்கு வரங்கொடுத்தற்கு வந்திருந்ததொரு கா’ (99) என்று அதியமான் நெடுமானஞ்சியைப்பற்றிய வரலாறொன்றும், ‘ஆய்க்கு அண்டிரனென்பதும் ஒரு பெயர்’ (131) என்று ஆயைப் பற்றிய செய்தியொன்றும், ‘நன்னன்மருகனன்றியு மென்றதற்குப் பெண்கொலைபுரிந்த நன்னன்போல வரையாநிரயத்துச் செலியரோ வன்னை யென்றமையின் அதுவும் வரைதற்கு ஒரு காரணமாக உரைப்பாரும் உளர்’ என்று நன்னனைப் பற்றிய வரலாறு ஒன்றும், ‘மோரியராவார் சக்கரவாள சக்கரவர்த்திகள்’ (175) என்று மோரியரைப்பற்றிய செய்தியும் கூறப்படுகின்றன. கருத்துரைத்தல் பல இடங்களில், இங்ஙனம் கூறியதன் கருத்து இதுவென்று பல அரிய செய்திகளைக் கூறுவர் :- ‘இதனால் நீயும் நீர்நிலைபெருகத் தட்கவேண்டுமென்பது கருத்தாகக் கொள்க’ (18) , ‘நீலமணிமிடற் றொருவன்போல வென்ற கருத்து, சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டுமென்பதாம்’ (91) , ‘பகைப்புலத்தோனென்ற கருத்து; பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டியவெல்லாந் தருதல் அவனுக்கு எளிதென்பதாம்’ (103) , ‘நீர்பாடிவரினும் பரிசிலர் முன்னே பெற்றமையின், அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக்கொள்க’ (110) ; ‘பாடினளாய் வரினென்ற கருத்து: அவட்கும் அவ்வாறன்றித்தன் பெண்மையால் வென்று கோடல் அரிதென்பதாம்’ (111) , ‘தலைப்பெயர்த்
|