பக்கம் எண் :

690

இலக்கணக்குறிப்பு

இவர் அங்கங்கே எழுதிச் செல்லும் இலக்கணங்கள் பலவகைப்படும். எச்சத்திரிபுகளையும், அசைநிலைகளையும், விகாரங்களையும், அடுக்கு இடைச்சொல் முதலியவற்றாற் பெறப்படும் பொருள்களையும் எடுத்துக் கூறுவார். புறப்பொருட்டுறைகளைச் செய்யுட்பொருளோடு பொருத்திக் காட்டுவதன்றிச் சில இடங்களில் சிலதுறைகளுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையிலிருந்து மேற்கோள் காட்டுவர். அங்ஙனம் இவர் காட்டிய துறைகள், பரிசில்விடை, வல்லாண்முல்லை, ஆனந்தப் பையுள், தாபதநிலை, முதுபாலை, உண்டாட்டு, செருமலைதல், தலைத்தோற்றம் என்பன.

சில இடங்களில் இஃது இன்ன அணியெனப் புலப்படுத்துவதுண்டு; இவ்வாறு இவர் கூறியிருக்கும் அணிகள்; உவமை, ஒட்டு, தலைப்பெயலு வமை, தற்குறிப்பேற்றம், நுவலாநுவற்சி, பழித்ததுபோலப் புகழ்தல், புகழ்வது போலப் பழித்தல், வெளிப்படை.

இவர் கூறியுள்ள இலக்கணக்குறிப்புக்கள் வருமாறு:

அசைநிலையும்மை, அசைநிலையோகாரம், அடுக்கு இரங்கற்குறிப் புணர்த்தல், அடுக்கு விரைவின்கண் வருதல், அடை, அத்தையென்னும் அசைநிலை, அம்மவென்னும் அசைநிலை, அம்ம கேட்பித்தற்கண் வருதல், அல்லீற்றுத் தனித்தன்மைவினை, அல்லீற்று வியங்கோள், அல்வழிச் சாரியை, ஆகுபெயர், ஆங்க என்னும் அசைநிலை, ஆங்கதென்பது ஒரு சொல்,

ஆங்கென்னும் அசைநிலை, ஆசாகென்னும் இரங்கற்குறிப்புப் படுமொழி, ஆல் என்னும் அசை, ஆலுருபு விரித்தல், ஆற்றலாற்போந்த பொருள். இகழ்ச்சிக் குறிப்பு, இசினென்பது தன்மைக்கண்வருதல், இசினென்பது படர்க்கைக்கண் வருதல், இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநிற்றல், இடவழுவமைதி, இடைக்குறை, இயரீற்று வியங்கோள், இருமுறை கூறுதலால் ஆதரவு தோற்றல், இழிவுசிறப்பும்மை, இறப்ப இழிந்த ஆனந்தஉவமை, இன்னென்னும் அசைநிலை, இன்னென்னும் சாரியை, உம் உந்தாய் நிற்றல். உம்மை இசைநிறை, உம்மை எஞ்சிநிற்றல். உம்மை விகாரத்தால் தொகுதல், உயர்திணை ஆறனொருமையில் அதுவெனுருபுகெடக் குகரம் வருதல், உருபுமயக்கம், உருபு விரித்துரைத்தல், உலமரலென்னும் உரிச்சொல், உவமங்கருதாத அடை, உவமை, எச்சத்திரிபு, எச்ச வும்மை. எதிர்காலச்சொல் இறந்தகாலப் பொருட்டாய் நிற்றல், எதிர்மறை வினையெச்சமுற்று, எனவென்னும் அசைநிலை, எனாவென்னும் எண்ணிடைச்சொல், ஏ யென்னும் அசைநிலை, ஐ என்னும் அசைநிலை, ஐகாரம் முன்னிலையை விளக்கி நிற்றல், ஐகாரம் விகாரத்தால் தொகுதல், ஒட்டன்றி ஒருபெயராய் நிற்கும் தொடர், ஒப்பில்போலி, ஒரு சொல் வருவித்து வினையெச்சத்தை முடித்தல், ஒருமை பன்மை மயக்கம். ஒன்றோவென்னும் எண்ணிடைச் சொல், ஓ என்பது அசைநிலைப் பொருளிலும் வியப்புப் பொருளிலும் வினாப் பொருளிலும் வருதல், ஓர்