| | நீபிழைத் தாய்போ னனிநா ணினையே தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக் | 20 | காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின் | | யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள் மிக்குவரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே. (43) |
திணையும் துறையும் அவை. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமற்பல்கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கை கரப்பவெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானைச் சோழன் மகன் அல்லையென, நாணியிருந்தானைத் தாமற்பல் கண்ணனார் பாடியது.
உரை: நில மிசை வாழ்நர் அலமரல் தீர - நிலத்தின்மேல் உயிர் வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய சுழற்சி நீங்க; தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி - சுடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்து; கால் உணவாக - காற்றை யுணவாகக் கொண்டு; சுடரொடு கொட்கும் - அச்சுடருடனே சூழ வரும்; அவிர் சடை முனிவரும் மருள - விளங்கிய சடையையுடைய அருந் தவரும் வியப்பால் மயங்க; கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித் தொரீஇ - வளைந்த சிறகினையும் கூரிய உகிரினையுமுடைய பருந்தினது எறிதலைக் கருதி அதனைத் தப்பி; தன் னகம் புக்க - தன்னிடத்தை யடைந்த; குறு நடைப் புறவின் தபுதி யஞ்சி - குறிய நடையையுடைய புறாவினது அழிவிற் கஞ்சி; சீரை புக்க - தன் னழிவிற் கஞ்சாது துலாத்தலையுட் புக்க; வரையா ஈகை உரவோன் மருக - வரையாத வண்மையையுடைய வலியோனது மரபினுள்ளாய்; நேரார் கடந்த முரண் மிகு திருவின் - பகைவரை வென்ற மாறுபாட்டான் மிக்க செல்வத்தையுடைய, தேர் வண் கிள்ளி தம்பி - தேர் வண் கிள்ளிக்குத் தம்பி; வார் கோல் கொடுமா மறவர் பெரும - நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ; கடு மான் கை வண் தோன்றல் - விரைந்த குதிரையையுடைய கைவள்ளிய தோன்றால்; ஐயம் உடையேன் - நினது பிறப்பின்கண் ஐயப்பாடுடையேன்; ஆர் புனை தெரியல் - ஆத்தியாற் செய்யப்பட்ட தாரையுடைய; நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யார் - நினக்கு முன்னுள்ளார் யாவரும் பார்ப்பார் வெறுக்கத் தகுவன செய்யார்; மற்று இது நினக்கு நீர்த்தோ என - மற்று இவ்வெறுக்கத்தக்க செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோ என்று; வெறுப்பக் கூறி - நீ வெறுக்கச் சொல்லி; நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
|