| | நீயே, அலங்குளைப் பரீஇஇவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி |
15. | மாக்கடல் நிவந்தெழுதரும் | | செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ அனையை ஆகன் மாறே தாயின் தூவாக் குழவி போல ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே. (4) | திணை : வஞ்சி ; துறை: கொற்றவள்ளை. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது.
உரை : வாள் வலந்தர மறுப்பட்டன - வாள் வெள்ளியைத் தருதலாற் குருதிக்கறை பட்டன; செவ்வானத்து வனப்புப் போன்றன - செக்கர்வானத்தினது அழகை யொத்தன; தாள் களங்கொளக் கழல்பறைந்தன - கால் புடைபெயர்ந்து போர் செய்து களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதலால் வீரக்கழல் அருப்புத்தொழில் பறைந்தவை; கொல்லேற்றின் மருப்புப் போன்றன - கொல்லும் ஆனேற்றினது கோட்டை யொத்தன; தோல் துவைத் தம்பின் துளை தோன்றுவன; நிலைக்கு ஒராவு இலக்கம் போன்றன - நிலையிற் றப்பாத இலக்கத்தை யொத்தன; மா எறிபதத்தான் இடம் காட்ட - குதிரைகள் எதிரியை யெறியும் காலமுடையான் இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட; கறுழ் பொருத செவ்வாயான் - முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை யுடைமையான்; எருத்து வவ்விய புலி போன்றன - மான் முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்வி யுதிரம் உவற்றியுண்ட புலியை யொத்தன; களிறு - களிறுகள், கதவெறியாச் சிவந்து உராஅய் - கதவை முறித்து வெகுண்டுலாவி; நுதி மழுங்கிய வெண்கோட்டான் - நுனை தேய்ந்த வெளிய கோட்டையுடைமையான்; உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன - உயிரையுண்ணும் கூற்றை யொத்தன; நீயே - நீதான்; அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசை - அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்பட்ட பொற்றேரின் மேலே; பொலிவு தோன்றி - பொலிவொடு தோன்றுதலால்; மாக்கடல் நிவந்து எழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினை - கரிய கடலின்கண்ணே யோங்கி யெழுகின்ற செய்ய ஞாயிற்றினது ஒளியையுடையை; அனையை யாகன் மாறு - அத்தன்மையையாதலால்; தாயில் தூவாக் குழவி போல - தாயில்லாத உண்ணாக் குழவி போல; ஓவாது கூஉம் ஒழியாது கூப்பிடும்; நின் உடற்றியோர் நாடு - நின்னைச் சினப்பித்தவருடைய நாடு எ-று. |