பக்கம் எண் :

121

 


44. சோழன் நெடுங்கிள்ளி

     இவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யெனவும் வழங்கப் படுவன்;
திருந்திய அரசியற் பயிற்சி இல்லாதவன். இவற்கும் சோழன் நலங்கிள்ளிக்கும்
எவ்வகையாலோ பகைமை யுண்டாயிற்று. அக் காலத்தே சோழன்
நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்த னென்னும் புலவ னொருவன் வந்து பரிசில்
வேண்டினாராக, அவரைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்ற னெனத் தவறாகக்
கருதிக் கொலைபுரிய முற்பட்டான். அதனை யுணர்ந்த ஆசிரியர் கோவூர்
கிழார், இவ் வேந்தனுக்குத் தகுவன கூறி அப் புலவனை யுய்வித்தார். பின்பு.
இவன் ஆவூர் சென்றிருக்கையில், ஆவூர் தனக்குரிய தாதலால், அதனைத்
தான் பெறுதற்காகச் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டான். இவன்
அஞ்சிப் போர்க்கு எழானாக, கோவூர் கிழார் தமது பாட்டால் இவற்கு மறத் தீ
யெழுவித்துப் போர் செய்யத் தூண்டினார். அப் போரில் உய்ந்தோடிய இவன்
உறையூரிடத்தே இருந்தான். உறையூர் இவற்குரியதே; நலங்கிள்ளி
உறையூரையும் முற்றுகையிட்டான். ஆங்கும் இவன் அடைபட்டுக் கிடந்தான்
அக்காலத்தும் ஆசிரியர் கோவூர் கிழாரே சென்று இருவரையும் சந்து செய்து
போர் செய்யாவாறு தடுத்து நலஞ்செய்தார். முடிவில் இவன் காரியாறு
என்னுமிடத்தே போரிற் பட்டு இறந்தான். அதனால் இவற்குக் காரியாற்றுத்
துஞ்சிய நெடுங்கிள்ளி யென்று பெயரெய்துவதாயிற்று.

     இப்பாட்டின்கண், முற்றுகைக்கஞ்சி அடைபட்டிருந்த நெடுங்கிள்ளியை
நோக்கி, ஆசிரியர் கோவூர் கிழார், “தோன்றால், யானைகள் வெய்துயிர்த்து
உருமென முழங்குகின்றன; குழவிகள் பாலின்றி அலறியழுகின்றன; மகளிர்
வறுந்தலை முடிக்கின்றனர்; மனையிடங்களில் எழும் அழுகுரல் நின்
அரண்மனைக்கண் கேட்கிறது; இவை நிகழவும் நீ அரண்மனைக்கண்
அடங்கிக் கிடத்தல் இனிதன்று; முன்னே வந்து, முற்றுகை யிட்டிருக்கும்
வேந்தனைப் பார்த்து ஈயும் அறவுணர்வால் “இது நினக்கு வேண்டின் பெற்றுக்
கொள்ளெனச் சொல்லி எயிற்கதவைத் திறத்தல் வேண்டும்; எதிரூன்றிக்
காத்தலே மறம் என்பது கருத்தாயின், போர் குறித்துத் திறந்துவிடல் வேண்டும்.
அறவையும் மறவையு மல்லையாய் மதிற் கதவைத் திறவாது ஒருபுறத்
தொடுங்கியிருப்பது நாணத் தகுவதொன்று“ என்று கூறுகின்றார்.

 இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
5தலமரல் யானை யுருமென முழங்கவும்
பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
10துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்