புலமையால் வென்று தலைமை பெறுவது அவர்க் கியல்பு என்று கூறுகின்றார்.
| வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடிய வென்னாது சுரம்பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி | 5. | ஓம்பா துண்டு கூம்பாது வீசி | | வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட நண்ணார் நாண வண்ணாந் தேகி ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ் | 10. | மண்ணாள் செல்வ மெய்திய | | நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. (47) |
திணையும் துறையு மவை. சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்த னென்னும் புலவனைக்காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தாரென்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக்கொண்டது.
உரை: வள்ளியோர்ப் படர்ந்து - வண்மை யுடையோரை நினைத்து; புள்ளிற் போகி - பழுமரம் தேரும் பறவை போலப் போகி; நெடிய என்னாது சுரம் பல கடந்து - நெடிய வென்று கருதாது அரிய வழி பலவற்றையும் கழிந்து; வடியா நாவின் - திருந்தாத நாவால்; வல்லாங்குப் பாடி - தாம் வல்லபடி பாடி; பெற்றது மகிழ்ந்து- ஆண்டுப் பெற்ற பரிசிலான் மகிழ்ந்து; சுற்றம் அருத்தி - சுற்றத்தை யூட்டி; ஓம்பா துண்டு - தாமும் பொருளைப் பாதுகாவா துண்டு; கூம்பாது வீசி - உள்ளம் மலர்ந்து வழங்கி; வரிசைக்கு வருந்தும்இப்பரிசில் வாழ்க்கை - தம்மைப் புரப்போாராற் பெறும் சிறப்பு ஏதுவாகவருந்தும் இப் பரிசிலான் வாழும் வாழ்க்கை; பிறர்க்குத் தீதறித் தன்றோ இன்று - பிறர்க்குச் செய்யும் கொடுமை யறிந்ததோ வெனின்இல்லை; திறப்பட - கூறுபட; நண்ணார் நாண - கல்வி முகத்தால் தம்மொடு மலைந்தோர் நாண; அண்ணாந் தேகி - தமது கல்வியான் வென்று தலையெடுத்து நடந்து; ஆங்கு இனி தொழுகின் அல்லது - அவ்விடத்து இனிதாக ஒழுகி னல்லது; ஓங்கு புகழ் மண்ணாள் செல்வமெய்திய நும்மோ ரன்ன செம்மலும் உடைத்து - உயர்ந்த புகழையுடைய நிலமாளும் திருப்பொருந்திய நும்மை யொக்கும் தலைமையு முடைத்து எ-று.
ஓங்கிய வென்பதூஉம் செல்வமுடைத் தென்பதூஉம் பாடம். சுரம்பல கடந்து புள்ளிற் போகி யென மாறிக் கூட்டுக. பரசில்வாழ்க்கை
|