பக்கம் எண் :

136

மருதனிளநாகனா ரெனப்படுகின்றார். இளநாகன் என்பது இவரது
இயற்பெயர்.இப் பாட்டின்கண், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வழுதி தன் நாட்டின் பரப்பினை மிகுதிப்படுத்தும் கருத்தினனாய்ப்
போர்க்கெழுதலை யறிந்து, “வேந்தே, ஊன் வேட்கை யுள்ளத்தைச்
செலுத்த, அதுகுறித்துத்தான்வேண்டு மருங்கில் புலி வேட்டெழுந்ததுபோல,
நீ வடபுல நோக்கிப் போர்வேட் டெழுந்தனை; அப்புலத்தே நின்னைப்
போரெதிரும் வேந்தர் யாரோ? அறியேம்; அவரது நாடு தன் பெரு
நல்யாணர் வளம் இழந்து கானக்கோழி வாழும் காடாகி விளியு மென்பதை
நன்கறிவேம்.” என்று பாராட்டிப் பாடியுள்ளார்.

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
5. வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
10. வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
15. வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே. (52)

     திணையும் துறையு மவை. அவனை மருதனிளநாகனார் பாடியது.

     உரை: அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் -
தெய்வங்களை யுடைத்தாகிய நெடிய சிகரங்களையுடைய மலையின்
கண்ணே முழையின்கண்; முனைஇ - துயிலை வெறுத்து; முணங்கு
நிமிர் வயமான் முழு வலி யொருத்தல் - மூரி நிமிர்ந்த புலியாகிய
நிரம்பிய வலியையுடைய ஏற்றை; ஊன் நசை உள்ளம் துரப்ப -
ஊனை விரும்பியவுள்ளம் செலுத்துதலான்; இரை குறித்து - அவ்
விரையைக் கருதி; தான் வேண்டு மருங்கின் வேட் டெழுந்தாங்கு -
தான் வேண்டிய விடத்தே விரும்பிச் சென்றாற் போல; வட புல
மன்னர் வாட அடல் குறித்து - வட நாட்டு வேந்தர் வாட அவரைக்
கொல்லுதலைக் கருதி; இன்னா வெம் போர்