| 59. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் கூடகாரம், வெள்ளியம்பலம், இலவந்திகைப் பள்ளி முதலியன போலச் சித்திரமாட மென்பது ஓரிடம். இவ்விடத்தே இறந்தமைபற்றி இப்பாண்டியன் இவ்வாறு கூறுப்படுகின்றான் கள்ளங் கபடமற்ற வுள்ளமும் சான்றோரைப் பேணும் சால்பும் பெருவன்மையும் உடையன்; இவனுடைய வெற்றிச் செய லொன்றும் விளக்கப்படவில்லை. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், இப் பாட்டின்கண் இவனுடைய அணிவிளங்கும் மார்பினையும், தாளுற நீண்டு விளங்கும் தடக்கையினையும் பாராட்டி, நீ அருளுதல் வல்லையேயன்றிப், பிறர் கூறும் பொய்யைத் தேர்ந்தறிகுவாயல்லை; பகைவரைத் தெறுதலின் ஞாயிற்றையும், எம்போல்வாரை யருளுதலில் திங்களையும் ஒப்பாய் என்று பரிந்தோதுகின்றார்.
சீ்த்தலை யென்பது ஓர் ஊர். அவ் வூரினராயினும் மதுரை நகர்க் கண் இருந்து கூலவாணிகம் செய்தமையின், இவர் இவ்வாறு கூறப்பட்டார். இவர் காலத்து வேந்தன் இப் பாட்டிற்குரிய நன்மாறனே யாவன், மணிமேகலை பாடிய ஆசிரியரும் இவரே யென்று பெயரளவே நோக்குமிடத்துப் புலனாகும். மணிமேகலை யாசிரியர் காலத்துப் பாண்டிவேந்தன் இவனல்ல னென்பது சிலப்பதிகாரத்தால் இனிது விளங்குதலின், இச் சீத்தலைச் சாத்தனார் வேறென்பது தெளிவாகும். ஆயினும் இஃது ஆராய்தற்குரிய தொன்று.
| ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பின் தாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி வல்லை மன்ற நீநயந் தளித்தல் தேற்றாய் பெரும பொய்யே யென்றும் | 5. | காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும் | | காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும் ஞாயி றனையைநின் பகைவர்க்குத் திங்க ளனையை யெம்ம னோர்க்கே. (59) |
திணை: அது. துறை: பூவை நிலை. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
உரை: ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் - ஆரம் தாழ்ந்த அழகு மிக்க மார்பினையும்; தாள் தோய் தடக்கை - முழந்தாளிலே தோய்ந்த பெரிய கையினையுமுடைய; தகைமாண் வழுதி - அழகு மாட்சிமைப்பட்ட வழுதி; நீ நயந்தளித்தல் வல்லை மன்ற - நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணுதலைத் தெளிவாக வல்லை மெய்யாக; தேற்றாய் - யாவரிடத்தும் தெளியாய்; பெரும-; பொய்யே - பொய்யை; என்றும் காய் சினம் தவிராது - எந்நாளும் சுடும் வெம்மை யொழியாது; கடல் ஊர்பு எழு தரும் ஞாயிறு
|