பக்கம் எண் :

156

அனையை - கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை யொப்பை;
நின் பகைவர்க்கு-; எம்மனோர்க்குத் திங்கள் அனையை -
எம்போல்வார்க்குத் திங்களை யொப்பை எ-று.

     தேற்றா யென்றது, தேறா யெனத் தன்வினையாய் நின்றது. தேற்றா
யென்பதற்குப் பொய் தெளிக்கப்படா யெனினு மமையும். ஞாயிற்றோடும்
திங்களோடு முவமித்தமையால், இது பூவைநிலை யாயிற்று.

     விளக்கம்: முழந்தாளளவும் கை நீண்டிருத்தல் ஆண் மக்கட்கிலக்கணம்,
“வலிய வாகும் நின் தாடோய் தடக்கை” எனப் பிறரும் கூறுப. பிறவினை
யென்றே கொள்ளின், பொருள் இது வென்பார், “பொய்........அமையும்” என்றார்.

60. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்

     இவ்வளவனை உறையூரிடத்தே யிருந்த மருத்துவன் தாமோதரனார் இப்
பாட்டின்கண் பாராட்டுகின்றார். இவன் தன் காலத்தேயிருந்த பாண்டி
வேந்தனோடு நட்புற்றுச் சேரனது பகைமையை வென்று புகழ்
மேம்பட்டிருக்கையில், சான்றோர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டி
யிருக்கின்றனர். நாட்டிற் குண்டாகும் குறை பலவும் போக்கி அதனைக் காக்கும்
வகையில் பெருமுயற்சியும் பேருழைப்பு முடையனாய் இருந்த இவனது இயல்பை
இப் பாட்டின்கண், “கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச்
சாகாட்டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட்டன்ன, எங்கோன்” என்பதனால்
தாமோதரனார் சிறப்பிக்கின்றார்.

     தாமோதரனார் என்னும் சான்றோர் உறையூரின்கண் மருத்துவத் தொழில்
புரிந்திருந்தவர். இனிய செய்யுள் செய்வதில் சிறந்தவர். இவரும் சேரமான்
தானைத் தலைவன் பிட்டங்கொற்றனால் பெருஞ் சிறப்புச் செய்யப்பெற்றவர்.
இவர் இவ் வளவனைப் போலப் பிட்டங்கொற்றனையும் அழகு திகழப்
பாடியுள்ளார். “மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டனைக் குறுக லோம்புமின்
தெவ்விர்” என்றும், அவன் “நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்கு
உலைக்கல் லன்ன வல்லாளன்” என்றும் கொற்றனது வன்மையும் வண்மையும்
ஒருங்கு விளங்கப் பாடியிருக்கின்றார்.

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
5.சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்