பக்கம் எண் :

164

தோல்கண் மறைப்ப வொருங்குமாய்ந் தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே
சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென
10.வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே
என்னா வதுகொ றானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவன் முக்கித் தண்புனற் பாயும்
யாண ரறாஅ வைப்பிற்
15.காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே. (63)

     திணையும் துறையும் அவை. அவரை அக்களத்திற் பரணர்
பாடியது.

      உரை: எனைப் பல் யானையும் - எத்துணையும் பலவாகிய
யானையும்; அம்பொடு துளங்கி - அம்பால் கலங்கி; விளைக்கும்
வினையின்றிப் படை யொழிந்தன - இனிமேலுண்டாக்கும் போரின்றிப்
படையிடத்துப் பட்டன; விறற் புகழ் மாண்டபுரவி யெல்லாம் - வெற்றிப்
புகழ் மாட்சிமைப்பட்ட குதிரையெல்லாம்; மறத்தகை மைந்தரொடு -
ஆண்மைக்கேற்ற வீரப் பாட்டுக் கூற்றையுடைய மேலாட்களுடனே;
ஆண்டுப் பட்டன - அக்களத்தே பட்டன; தேர் தர வந்த சான்றோர்
எல்லாம் - தேர் கொடுவர வந்த போரிற் கமைந்தோ ரெல்லாம்; தோல்
கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் - தாம் பிடித்த பரிசை தம் கண்
மறைப்பச் சேரப் பட்டனர்; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
- வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப்பட்ட மயிர் சீவாது
போர்க்கப்பட்ட கண்ணையுடைய முரச மெல்லாம்;பொறுக்குநர்
இன்மையின் - பரிப்பார் படுதலான்; இருந்து விளிந்தன - இருந்து
கெட்டன; சாந்தமை மார்பில் நெடு வெல் பாய்ந்தென - சாந்தமைந்த
மார்பின்கண்ணே நெடிய வேல் பாய்ந்தெனவாக; வேந்தரும் பொருது
களத்து ஒழிந்தனர் - அரசரும் பொருது அக்களத்தின்கண்ணே
மடிந்தனர்; இனி என்னாவது கொல்தான் - இனி என்ன வருத்த
முறுவதோ தான்; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் -
கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினையுடைய
மகளிர்; பாசவல் முக்கி - செவ்வி யவலை முக்கி; தண் புனல் பாயும் -
குளிர்ந்த புனற்கண்ணே பாயும்; யாணர் அறாஅ வைப்பின் புதுவருவா
யறாத