| அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும் வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும் | 15. | கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த | | இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலி னொரீஇப்பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. (71) |
திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு.
உரை: மடங்கலிற் சினைஇ - சிங்கம் போலச் சினந்து; மடங்கா உள்ளத்து அடங்காத் தானை வேந்தர் - மீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும் மிகைத்துச் செல்லும் படையையுமுடைய வேந்தர்; உடங்கு இயைந்து - தம்மில் ஒப்பக் கூடி; என்னொடு பொருதும் என்ப - என்னொடு பொருவேமென்று சொல்லுவர்; அவரை ஆர் அமர் அலறத் தாக்கி - அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது; தேரொடு அவர்ப்புறம் காணேனாயின் - தேவருடனே அவருடைந் தோடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின்; சிறந்த பேரமர் உண்கண் இவனினும் பிரிக - எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட கண்ணியையுடைய இவளினும் நீங்குவேனாக; அறன் நிலை திரியா அன்பின் - அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய; அவையத்து - அவைக்களத்து; திறனில் ஒருவனை நாட்டி - அறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து; முறை திரிந்து மெலிகோல் செய்தே னாகுக - முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தே னாகுக; மலி புகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் - மிக்க புகழையுடைய வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்; பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் - பொய்யாத புது வருவாயையுடைய மைய லென்னும் ஊர்க்குத் தலைவனான மாவனும்; மன் னெயில் ஆந்தையும் - நிலைபெற்ற எயிலென்னு மூரையுடைய ஆந்தையும்; உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும் - புகழமைந்த அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும்; வெஞ்சின இயக்கனும்- வெய்ய சினத்தையுடைய இயக்கனு மென; உளப்படப் பிறரும் - இவருட்படப் பிறரும்; கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த - எனது காண்போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய; இன் களி மகிழ் நகை இழுக்கியான் - இனிய செருக்கையுடைய மகிழ்நகையைத் தப்பியவனாகி; மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த - பல வுயிரையும் பாதுகாக்கும் அசரர் குலத்திற்
|