பக்கம் எண் :

218

 
 திண்பிணி முரச மிழுமென முழங்கச்
சென்றமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலு மாற்றார் வெடிபட்
டோடன் மரீஇய பீடின் மன்னர்
5நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
 காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
10நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென
 வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர் மாதோ
வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்
தண்ணல் யானை யடுகளத் தொழிய
அருஞ்சமந் ததைய நூறிநீ
15பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே.  (93)

     திணை: வாகை. துறை: அரசவாகை. அவன் பொருது
புண்பட்டு நின்றானை அவர் பாடியது.

     உரை: திண் பிணி முரசம் இழும் என் முழங்க -
திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழு மென்னும் ஓசையை
யுடைத்தாய் ஒலிப்ப; சென்று அமர் கடத்தல் யாவது - மேற்
சென்று போரை வெல்லுதல் இனி எங்கே யுளது; வந்தோர் -
நின்னோடு எதிர்ந்து வந்தோர்; தார் தாங்குதலு மாற்றார் - நினது
தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய்; வெடி பட்டு ஓடல்
மரீஇய பீடில் மன்னர்- சிதறிக் கெட்டுப் போதலிலே மருவிய
பெருமையில்லாத அரசரது; நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ -
நோயின் பக்கத்தான் இறந்த உடம்பை யணைத்து; காதல் மறந்து -
தமது ஆசைத்தன்மையை மறந்து; அவர் தீது மருங்கு அறுமார் -
அவர் வாளாற் படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்க வேண்டி;
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - அறத்தை விரும்பிய
கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுமுடைய அந்தணர்; திறம்
புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி - நல்ல கூற்றிலே பொருந்திய
பசிய தருப்பைப் புல்லைப் பரப்பினராய்க் கிடத்தி; மறம் கந்தாக -
தமது ஆண்மையே பற்றுக்கோடாக; நல்லமர் வீழ்ந்த நீள் கழல்
மறவர் செல்வுழிச் செல்கென - நல்ல பூசலிலே பட்ட மேம்பட்ட
வீரக் கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்க
வென்று;