பக்கம் எண் :

221

                    95. அதியமான் நெடுமான் அஞ்சி

         தொண்டை  நாட்டை யாண்ட வேந்தர்க்குத் தொண்டைமான்
என்பது  பெயர்.  அதியமான் காலத்தே தொண்டை நாட்டை யாண்ட
தொண்டைமான்,   அதியமான்பால்  பகைமை  கொண்டான். தன்பால்
படைவலி  மிக்கிருப்பதாக,  வெண்ணி, அவ்வேந்தன் செருக்குற்றான்.
அவனது அறியாமையை யறிந்த அதியமான், போரின் கொடுமையையும்,
அதன்கண்  அவன்   வலியிழந்து   கெடுவதன் உறுதியையும், அதனால்
நாட்டுக்கும்  நாட்டு  மக்கட்கும்   நேரும்  கேட்டையும் தெளிந்து
கொள்ளுமாறு  அறிவித்தற்கு   ஒளவையாரை அவன்பால் தூதுவிட்டான்.
ஒளவையார்   அவன்பாற்   சென்று சேர்ந்தார். தொண்டைமான் தன்
படைப்பெருமையை  அவருக்குக்   காட்ட வெண்ணி, அவரைத் தன்
படைக்கலக்  கொட்டிலுக்கு  அழைத்துச்   சென்று பலவேறு
படைக்கலங்களைக்காட்டினான்.  அவன்  கருத்தறிந்த ஒளவையார்
அதியமான்  படைக்கலங்களைப்  பழிப்பது போலப் புகழ்ந்தும்
தொண்டைமான் படைக்கலங்களைப் புகழ்வது போலப் பழித்தும்இப்
பாட்டின்கட் கூறியுள்ளார்.

 இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
5கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
 உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.
(95)

     திணை: பாடாண்டிணை. துறை: வாண்மங்கலம். அவன்
தூது விடத்தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன்
படைக்கலக் கொட்டில் காட்ட அவர் பாடியது.

     உரை: இவ்வே - இவைதாம்; பீலியணிந்து - பீலி யணியப்பட்டு;
மாலை சூட்டி - மாலை சூட்டப்பட்டு; கண் திரள் நோன் காழ்
திருத்தி - உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச்
செய்யப்பட்டு; நெய் அணிந்து - நெய்யிடப்பட்டு; கடி யுடைவியன்
நகர - காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன; அவ்வே -
அவைதாம்; பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து - பகைவரைக்
குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து; கொல் துறைக்குற்றில என்றும்
- கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டி லிடத்தனவாயின
எந்நாளும்; உண்டாயின் பதம் கொடுத்து - செல்வ முண்டாயின்
உணவு கொடுத்து; இல்லாயின் உடன் உண்ணும் - இல்லையாயின்
உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்; இல்லோர் ஒக்கல்