பக்கம் எண் :

229

 

பிடி - கைப்பிடியாகிய  காம்பு;  இது  கைந்நீட்டு  எனப்பட்டது.
படையெடாதவழி, பகைவர்   பொருதலைச் செய்யாராதலால், “அம்பு
ஒடுக்கவும்” என்றார்.  புறத்தே நின்று உயிரைக் கொண்டுபோதல்
கூற்றுவற்கு  இயல்பு.  அலம்  வரு கழனி - சுழலும் கழனி. அலம்
வருதல், அலமருதல் போலச் சுழற்சிப் பொருளது.

               99. அதியமான் நெடுமான் அஞ்சி

     அதியமான் அரசு கட்டி லேறியதும், தனக்கு முன்னோருடைய
சிறப்பெல்லாம்  தான் எய்தினான்; எழு பொறி யமைந்த இலாஞ்சனை
பெற்றான்;   தன்னோடு  பொர  வந்த அரசர் எழுவரை வென்றான்.
இவ்வாறு  பெருஞ் சிறப்பெய்தியும்  அமையாது  கோவலூர்மேற்
படையெடுத்துச்  சென்று  அதற்குரிய  வேந்தனை வென்று வாகை
சூடினான். அக்காலை அதனை யறிந்த ஆசிரியர் பரணர் அவனுடைய
போர் வென்றியை அழகொழுகும் தமிழாற் பாடினார். ஒளவையாரும்
இப் பாட்டின்கண் இச்செய்தி முற்றவும் தோன்றப் பாடியுள்ளார்.

 அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
5ஈகையங் கழற்கா லிரும்பனம் புடையற்
 பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல்
எழுபொறி நாட்டத் தெழா அத் தாயம்
வழுவின் றெய்தியு மமையாய் செருவேட்
டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச்
10சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய
 அன்றும் பாடுநர்க் கரியை யின்றும்
பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்டு திகிரி யேந்திய தோளே.    
(99)

     திணையும் துறையும் அவை. அவன் கோலலூ ரெறிந்தானை
அவர் பாடியது.

     உரை:அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் - தேவர்களைப்
போற்றி  வழிபட்டும்  அவர்களுக்கு  வேள்விக்கண்  ஆவுதியை
யருந்துவித்தும்; அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் -
பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தினின்று
இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்; நீரக விருக்கை -
கடலுக்குட்பட்ட நிலத்தின்கண்ணே;