| | முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே பாழூர்க் கிணற்றிற் றூர்கவென செவியே நரந்தை நறும்புண் மேய்ந்த கவரி | 5 | குவளைப் பைஞ்சுனை பருகி யயல | | தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோ யிமயம் தென்றிசை யாஅய்குடி யின்றாயிற் பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே. (132) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை : முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேன் - யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனைப் பின்பே நினைந்தேன் யான்; என் உள்ளம் ஆழ்க - அவ்வாறு நினைந்த குற்றத்தால் எனதுள்ளம் அமிழ்ந்திப் போவதாக; என் நா போழ்க - அவனை யன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக; என் செவி பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க - அவன் புகழன்றிப் பிறர் புகழைக் கூறக்கேட்ட எனது செவியும் பாழ்பட்ட வூரின்கண் கிணறு போலத் தூர்வதாக; நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி - நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா; குவளைப் பைஞ்சுனை பருகி - குவளைப் பூவையுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து; அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் - அதன் பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும்; வடதிசையது வான் தோய் இமயம் - வட திசைக்கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்; தென்திசை ஆய் குடி இன்றாயின் - தென்றிசைக்கண் ஆய் குடியும் இல்லையாயின்; இம் மலர்தலை யுலகு பிறழ்வது மன் - இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் கீழ் மேலதாகிக் கெடும் எ-று.
முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேன் என் உள்ளம் ஆழ்தற்குக் காரணம் கூறினமையான், பிறரைப் புகழ்ந்த நாவெனவும் பிறர் புகழ் கேட்ட செவியெனவும் ஏனையவற்றிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. அன்றி, வடதிசை, தேவருலகோ டொத்தலான் இமயத்தால் தாங்க வேண்டுவதில்லை; தென்றிசைக்கண் ஆய் குடி தாங்கிற்றில்லை யாயின் இவ்வுலகு பிறழும்; அதனால் இமயத்துக்கு முன்னுள்ளப்படுவோனைப் பின்னுள்ளினேனாதலால், எனதுள்ளம் ஆழ்க; எனது நா போழ்க; எனது செவி தூர்வதாக வென்றதாக்கி உரைப்பினு மமையும்.
விளக்கம் :இமயத்தின்கண் கவரிமான் நரந்தை நறும்புல் மேய்ந்து சுனைநீர் பருகித் தகரத் தண்ணிழல் வதியும் என இவர் கூறியது போலக் குமட்டூர்க் கண்ணனார், |