பக்கம் எண் :

284

 

ஒல்கல் உள்ளமொடு - தளர்ந்த நெஞ்சத்துடனே; ஒருபுடைத் தழீஇ -
ஒரு மருங்கிலே யணைத்துக் கொண்டு; புகழ்சால் சிறப்பின் நின்
நல்லிசை யுள்ளி - புகழ்தற்கமைந்த தலைமையையுடைய நினது நல்ல
புகழை நினைந்து; எந்தை யான் வந்தனென் - என்னுடைய இறைவா
யான் வந்தேன்; என்றும் - எந்நாளும்; மன்று படு பரிசிலர்க் காணின்
- மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின்; கன்றொடு கறை யடி
யானை இரியல் போக்கும் - கன்றுடனே கறை பொருந்திய
அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்;
மலை கெழு நாடன் - மலையையுடைய நாடனே; மா வேள் ஆய் -
மா வேளாகிய ஆயே; களிறும் அன்று - யாம் வேண்டியது யானையும்
அன்று; மாவும் அன்று - குதிரையும் அன்று; ஒளிறு படைப் புரவிய
தேரும் அன்று - விளங்கிய பொற்படையையுடைய குதிரையிற்
பூட்டப்பட்ட தேரும் அன்று; பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர் -
பாணரும் புலவரும் கூத்தர் முதலாயினாருமாகிய அவர்கள்; தமதெனத்
தொடுக்குவராயின் -   தம்முடைய   பொருளென
வளைத்துக்கொள்வாராயின்; எமது எனப் பற்றல் தேற்றா - அதனை
யெம்முடைய தென்று அவர்பானின்றும் மீண்டு கைக்கொள்ளுதலைத்
தெளியாத; பயங்கெழு தாய மொடு - பயன் பொருந்திய உரிமையோடு
கூடி; அன்னவாக நின் ஊழி - மற்றும் அத்தன்மையவாக நின்னுடைய
வாழ்நாட்கள்; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை - யான்
வந்தது நின்னைக் காண்டல்வேண்டிய மாத்திரையே; வேண்டார் உறு
முரண் கடந்த ஆற்றல் - பகைவரது மிக்க மாறுபாட்டை வென்ற
வலியையுடைய; பொதுமீக் கூற்றத்து நாடு கிழவோய் - யாவரும்
ஒப்பப் புகழும் நாட்டை யுடையாய் எ-று.

     நாடு கிழவோய், யான் வந்தது, களிறு முதலியன வேண்டியன்று;
நின்னைக் காண்டல் வேண்டிய அளவே; நின்னூழி அன்னவாக வெனக்
கூட்டுக. அல்லதூஉம், யானை முதலாயினவன்றிப் பிறவற்றையும் பாணர்
முதலாயினோர் தமதெனத் தொடுக்குவராயினென இயைத்துரைப்பினு
மமையும். கொடுவரி: பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை;
ஆகுபெயருமாம்.

     இனி, ததை மெல் லொதுக்கின் எனவும், வடிநவில் பனுவல் எனவும்
ஒளிறு நடைப் புரவிய எனவும் பாடமோதுவாரு முளர். வடிநவில் பனுவல்
புலம்பெயர்ந் திசைப்ப வென்று கொண்டு வடித்தல் பயின்ற பாட்டை
இசைதொறும் பெயர்த்து வாசிக்க வென்றுரைப்பாருமுளர். பொதுமீக் கூற்றம்,
பொதியிலுமாம்.

    விளக்கம் : வளைந்த வரிகளை மேனி முழுதும் உடைமைபற்றிப்
புலிக்குக் கொடுவரி யென்று பெயராயிற்று. வளைந்த வரிகளையுடைய
புலியென விரிதல்பற்றி, இதனைப் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த
அன்மொழித் தொகை யென்றும், இஃது இயற்பெயரன்மையான்,