| | ஓடாப் பூட்கை யுரவோர் மருக உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந மாயா வுள்ளமொடு பரிசி லுன்னிக் | 10 | கனிபதம் பார்க்குங் காலை யன்றே | | ஈத லானான் வேந்தே வேந்தர்க்குச் சாத லஞ்சாய் நீயே யாயிடை இருநில மிளிர்ந்திசி னாஅங் கொருநாள் அருஞ்சமம் வருகுவ தாயின் | 15 | வருந்தலு முண்டென பைதலங் கடும்பே. (139) |
திணை : அது. துறை : பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது.
உரை : சுவல் அழுந்தப் பல காய - தோள் வடுப்படப்பல முட்டுக்களையும் காவிய; சில்லோதிப் பல் இளைஞரும் - சிலவாய மயிரையுடைய பல இளையோரும்; அடி வருந்த நெடிது ஏறிய - அடிவருந்த நெடும்பொழுது ஏறிய; கொடி மருங்குல் விறலியரும் - கொடிபோலும் இடையினையுடைய விறலியரும் என இவர்; வாழ்தல் வேண்டி - வாழ்தலை விரும்பி; பொய் கூறேன் மெய் கூறுவல் - பொய் சொல்லேன் மெய் சொல்லுவேன்; ஓடாப் பூட்கை உரவோர் மருக - புறங்கொடாத மேற்கோளையுடைய வலியோர் மரபி லுள்ளானே! உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந - உயர்ந்த உச்சியை யுடைத்தாய் உழப்படாத நாஞ்சிலென்னும் பெயரையுடைய மலைக்குவேந்தே; மாயா உள்ளமொடு - மறவாத நினைவுடனே; பரிசில் உன்னி - பரிசிற்கு வந்து பொருந்தி; கனி பதம் பார்க்கும் காலையன்று - பின்பு நின்று நின் மனம் நெகிழும் செவ்வி பார்க்கும் காலமன்று யான் வறுமையுற்று நிற்கின்ற நிலைமை; ஈதலானான் வேந்து - நினக்கு வேண்டிற்றுத் தருதலை அமையான் நின்னுடைய அரசன்; வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீ - அவ்வரசன் பொருட்டுச் சாதலுக்கு அஞ்சாய் நீ; ஆயிடை - அவ்விடத்து; இரு நிலம் மிளிர்ந்திசி னாஅங்கு - பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல; ஒருநாள் அருஞ் சமம் வருகுவ தாயின் - ஒருநாள் பொறுத்தற்கரிய பூசல் வருவதாயின்; வருந்தலுமுண்டு என் பைதலங் கடும்பு - வருந்துதலு முளதாம் எனது பசித்துன்பத்தையுடைய சுற்றம் எ-று.
அதனாற் போர் வருதன் முன்னே பரிசில் தந்து விடுவாயாக வென்பது கருத்து. வேந்து என்றது சேரனை.
விளக்கம் : அழுந்தியவழி வடு வுண்டாதலால், அழுந்த வென்றதற்கு வடுப்பட வென வுரை கூறினார். இளைஞரென்றது, சில்லோதி யென்ற அடைச்சிறப்பால் பெண்பால் குறித்து நின்றது. புரை தீர்ந்த நன்மை பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மையாம் என்பது கொண்டு, |