| 5 | யாரீ ரோவென வினவ லானாக் | | காரெ னொக்கற் கடும்பசி யிரலவ வென்வே லண்ணற் காணா வூங்கே நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென்றும் | 10 | உடாஅ போரா வாகுத லறிந்தும் | | படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை யாயினு மீத்த னன்றென மறுமை நோக்கின்றோ வன்றே பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே. (141) |
திணை : அது. துறை : பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம். வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.
உரை : பாணன் சூடிய பசும் பொன் தாமரை - பாணன் சூடிய ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ; மாணிழை விறலி மாலையொடு விளங்க - மாட்சிமைப்பட்ட அணியினையுடைய விறலி யணிந்த பொன்னரி மாலையுடனே விளங்க; கடும் பரி நெடுந்தேர் பூட்டு விட்டு அசைஇ - கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப் பிணிப்புவிட்டு இளைப்பாறி; ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் - ஊரின்கண் இருந்தீர் போலச் சுரத்திடை இருந்தீர்; யாரீரோ என - நீர் யாவிர் பாணரோ என; வினவலானா - எம்மைக் கேட்டலமையாத; காரென் ஒக்கல் கடும் பசி இரவல - புல்லென்ற சுற்றத்தையும் மிக்க பசியையுமுடைய இரவலனே; வென் வேல் அண்ணல் காணா ஊங்கு - வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன் முன்; நின்னினும் புல்லியேம் மன் - யாம் நின்னினும் வறியேம்; இனி - இப்பொழுது; இன்னேம் ஆயினேம் - அவ்வறுமை நீங்கி இத் தன்மையே மாயினேம்; என்றும் - எந்நாளும்; உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்- உடா போராவாதலை யறிந்து வைத்தும்; படாஅம் மஞ்ஞைக்கு ஈத்தஎம்கோ - படாத்தினை மயிலுக்குக் கொடுத்த எம் இறைவன்; கடாஅ யானைக் கலிமான் பேகன் - மதமிக்க யானையினையும் மனஞ் செருக்கிய குதிரையினையுமுடைய பேகன்; எத்துணையாயினும் ஈத்தல் நன்றென - எவ்வளவாயினும் கொடுத்தல் அழகிதென்று; மறுமை நோக்கின்றோ அன்று - மறுபிறப்பை நோக்கிற்றோவெனின் அன்று; பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மை - பிறரது மிடியைக் கருதிற்று அவனது கைவண்ணம் எ-று.
|