பக்கம் எண் :

300

 
 பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
5புனைத்தினை யயிலு நாட சினப்போர்க்
 கைவள் ளீகைக் கடுமான் பேசு
யார்கொ லளிய டானே நெருநற்
சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசி னிரங்கு மருவி
10நளியிருஞ் சிலம்பிற் சீறூ ராங்கண்
 வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று
நின்னுநின் மலையும் பாட வின்னா
திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையக நனைப்ப விம்மிக்
15குழலினை வதுபோ லழுதனள் பெரிதே.  (143)

     திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; தாபத நிலையுமாம்.
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர்
பாடியது.

     உரை : மலை வான் கொள்க என - மலையை மழை வந்து
சூழ்க வென்று; உயர் பலி தூஉய் - மிக்க பலியைத் தூவி; மாரி
ஆன்று  மழை மேக்கு உயர்க வென - அம் மழை மிகப்
பெய்தலான் அப்  பெயல்  அமைந்து  முகில் மேலே போவதாக
வேண்டுமென; கடவுள்   பேணிய  குறவர்  மாக்கள் -
தெய்வத்தைப் போற்றிய குறமாக்கள்; பெயல் கண் மாறிய உவகையர்
- மழை இடத்து மாறிய உவகையராய்; சாரல் புனத் திணை அயிலும்
நாட - மலைச் சாரற்கண்புனத்தினையை யுண்ணும் நாட; சினப் போர்
- சினத்தினாற் செய்யும் போரையும்;   கைவள்  ஈகை - கை  
வண்மையாற்  கொடுக்கும் கொடையினையு முடைய; கலிமான்    
பேக - விரைந்த குதிரையையுடைய பேக; அளியள் யார் கொல் -
அவ் வருளத்தக்காள் யாரோதான்;   நெருநல் - நேற்று;   சுரன்
உழந்து  வருந்திய ஒக்கல் பசித்தென - சுரத்தின்கண்ணே நடந்து
வருந்திய எனது சுற்றம் பசித்ததாக; குணில் பாய் முரசின் - கடிப்பு
அறையப்பட்ட முரசு போல; இரங்கும் அருவி - ஒலிக்கப்பட்ட
அருவியையுடைய; நளி இருஞ் சிலம்பின் சீறூராங்கண் - பெரிய
உயர்ந்த மலைக்கண் சிறிய ஊராகிய அவ்விடத்து; வாயில் தோன்றி
- வாயிற்கண்ணே வந்து தோன்றி; வாழ்த்தி நின்று நின்னும் நின்
மலையும் பாட - வாழ்த்தி நின்று நின்னையும் நின் மலையையும்
பாட; இன்னாது இகுத்த கண்ணீர் - அப்பொழுது இன்னாதாகச்
சொரியப்பட்ட கண்ணீரை; நிறுத்தல் செல்லாள் - ஒழித்தல்
மாட்டாளாய்; முலையகம் நனைப்ப விம்மி - முலையிடத்தை
நனைப்பப் பொருமி; குழல் இனைவது போல