| நெடுநாள்பிரிந்திருக்கும் பிரிவுத்துயர் மற்றொருபுறம் வருத்த வருந்தி நிற்கும் தன் மனைக்கிழத்தியாரை யடைந்து தாம் பெற்ற பெருஞ் செல்வத்தைப் பெறார்க்கும் பிறர்க்கும் வழங்கித் தாமும் உண்டு இனிதிருந்தார்.
இப் பாட்டின்கண் பெருஞ்சித்திரனார் குமணன் தந்த பெருவளத்தைப் பெறுங்கால், அவனை இனிய தமிழால் வாழ்த்துகின்றார். இதன்கண் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற வள்ளல்கள் எழுவரையும் எடுத்தோதி, இவ் வெழுவர்க்குப் பின்னே இரவலர் இன்மை தீர்த்தற்கு யான் உள்ளேன் என்று மேம்பட்டிருக்கும் நின்னை யடைந்தேன்; முதிரமலைத் தலைவ, குமண, என்னை ஏற்றுப் பேணிச் சிறப்பித்த நீ வண்மையாலும், வேற்படை நல்கும் வென்றியாலும் மேம்படுவாயாகஎன வாழ்த்துகின்றார்.
| முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் அரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் | 5 | கொல்லி யாண்ட வல்வி லோரியும் | | காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரி யீகை மறப்போர் மலையனும் ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும் | 10 | ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை | | அருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப் பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி மோசி பாடிய வாயு மார்வமுற் றுள்ளி வருந ருலைவுநனி தீரந் | 15 | தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் | | கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங் கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப் பாடி வருநரும் பிறருங் கூடி இரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண் | 20 | உள்ளி வந்தனென் யானே விசும்புறக் | | கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் | 25 | அதிரா யாணர் முதிரத்துக் கிழவ |
|