| | நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத் | 10 | தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய | | பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே. (164) |
திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடுபற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
உரை: ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் - அடு தலை மிகவும் மறந்த புடை யோங்கிய அடுப்பின்கண்; ஆம்பி பூப்ப - களாம்பி பூப்ப; தேம்பு பசி உழவா - உடம்பு மெலியும் பசியான் வருந்தி; பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி - பாலின்மையால் தோலாந்தன்மையுடனே திரங்கி; இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை - துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை; சுவைத்தொறு அழூஉம் தன் மகத்துமுக நோக்கி - வறிதே சுவைக்குந்தோறும் அழுகின்ற தனது பிள்ளையது முகத்தைப் பார்த்து; நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் - நீரால் நிரம்பிய ஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய; என் மனையோள் எவ்வம் நோக்கி - என் மனைவியது வருத்தத்தைப் பார்த்து; நினைஇ நிற்படர்ந்திசின் - இந்த வருத்தம் தீர்த்தற்குரியாய் நீ யென நினைந்து நின்பால் வந்தேன்; நற்போர்க் குமண - நல்ல போரையுடைய குமண; என் நிலை அறிந்தனை யாயின் - எனது வறுமை நிலையை நீ யறிந்தாயாயின்; இந் நிலை - இவ்வாறு வறுமையுற்று நின்ற நிலைமைக்கண்; தொடுத்துங் கொள்ளா தமையலென் - வளைத்தாயினும்பரிசில் கொள்ளாது விடேன்; அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் - பலவாக அடுக்கப்பட்ட பண்ணுதலமைந்த நரம்பினையுடைய தோலாற் போர்க்கப்பட்ட நல்ல யாழையும்; மண்ணமை முழவின் - மார்ச்சனை நினைந்த மத்தளத்தினையுமுடைய; வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோய் - கூத்தரது மிடியைக் கெடுக்கும் குடியின்கட் பிறந்தோயாதலால் எ-று.
அடுதலை மிகவும் மறத்தலால் தேய்வின்றி உயர்ந்த அடுப்பென்றாராம். குமண, நீ இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோ யாதலால், இந்நிலை தொடுத்தும் கொள்ளாது அமையலென் எனக் கூட்டுக. |