பக்கம் எண் :

357

 

சில சொல்லின்பல கூந்தல் - மெத்தென்ற சொல்லையும் பலவாகிய
கூந்தலையுமுடைய; நின் நிலைக் கொத்த நின் துணைத் துணைவியர் -
நின்னுடைய நிலைமைக்கு மனமொத்த நின்னுடைய துணைவியராகிய
காதலிமார்; தமக்கு அமைந்த தொழில் கேட்ப - தத்தமக்குப்
பொருந்திய ஏவற்றொழிலைக் கேட்டுச் செய்ய; காடு என்ற நாடு என்ற
ஆங்கு - காடென்றும் நாடென்றும் சொல்லப்பட்ட
அவ்விடத்தின்கண்; ஈரேழின் இடம் முட்டாது - காட்டுள்
எழுவகைப்பட்ட பசுவானும் நாட்டுள் எழுவகைப்பட்ட பசு வானும்
முட்டாது; நீர் நாண நெய் வழங்கியும் - நீர் நாணும் பரிசு நெய்யை
வழங்கியும்; எண் நாணப் பல வேட்டும் - எண்ணிறப்பப் பல
வேள்விகளை வேட்டும்; மண் நாணப் புகழ் பரப்பியும் - மண்
பொறாமல் புகழைப் பரப்பியும்; அருங் கடிப் பெருங்காலை -
அவ்வாறு பெறுதற்கரிய விளக்கமுற்ற வேள்வி முடிபாகிய பெரிய
காலத்து; விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை - விருந்தினரைப்
பொருந்திய நினது திருந்திய மேம்பட்ட நிலைமையை; என்றும்
காண்க. தில்யாம் - எந்நாளும் காண்பேமாக யாங்கள்; குடா அது
பொன்படு நெடுவரை புயல் ஏறு சிலைப்பின் - மேற்றிசைக்கண்
பொன் படுகின்ற நெடிய குடக மலைக்கண்ணே முகிலின்கண்
இடியேறு முழங்கின்; பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் - பூப்பரந்த
புதுநீரையுடைய காவிரி உலகத்தைப் புரக்கும்; தண்புனல் படப்பை
எம்மூர் ஆங்கண் - குளிர்ந்த புனற்பக்கத்தையுடைய
எம்மூரிடத்தின்கண்; உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல்
யான் - உண்ணப்படுவனவற்றை யேறியும் கொண்டாடுவேமாகப்
போவேன் யான்; செல்லாது மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை -
போகாது மழை தலையெடுப்ப உயர்ந்த நெடிய பக்கவரைகளை
யுடைத்தாய்; கழை வளர் இமயம் போல - மூங்கில் வளரும்
இமயமலை போல; நிலீஇயர் நீ நில மிசையானே - நிலைபெறுவாயாக
நீ நிலத்தின்மேலே எ-று.

     முது முதல்வன் வாய் போகாதென்ற கருத்து, அப் பெரியோனாலும்
எக்காலமும் அத்தியயனம் பண்ணப்படு மென்றதாகக் கொள்க. “வாய்
போகா தொன்று புரிந்த”வென்பதற்கு மெய்ம்மை நீங்காமல்
வீடொன்றையுமே புரிந்தவென்றும், “பொய் யோராது”என்பதற்குத் தாம்
பொய்ம்மையை விசாரியாதென்றும், “மூவேழ் துறை”யென்பதற்கு
இருபத்தொரு கூறுபட்ட தருக்க நூலென்றும், “ஈரேழின்”என்பதற்குக்
காட்டுள் ஏழு நாளும் நாட்டுள் ஏழுநாளு மென்றும், “கற்பின் வலை சூடி”
யென்பதற்குக் கற்பினால் வலைசூடி யென்றும் உரப்பினு மமையும்.

     உரவோர் மருக, பொலியக், கேட்ப, வழங்கியும் வேட்டும், பரப்பியும்
இவ்வாறு விருந்துற்ற நின் திருந்தேந்து நிலை, என்றும் இன்றுபோலக்
காண்பேமாக யாமும்;