யுடையவன்; இவன் களிறு மதம்பட்டதனால் இவன் நோயின்றிச் செல்வானாதல் வேண்டும் என்று குறிக்கின்றார். | இவனியா ரென்குவை யாயி னிவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலி யன்ன களிற்றுமிசை யோனே | 5. | களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் | | பன்மீ னாப்பட் டிங்கள் போலவும் சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே நோயில னாகிப் பெயர்கதி லம்ம | 10. | பழன மஞ்ஞை யுகுத்த பீலி | | கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளைந்த கள்ளின் விழுநீர் வேலி நாடுகிழ வோனே (13) | திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
உரை: இவன் யார் என்குவையாயின் - இவன் யாரென்று வினவுவாயாயின்; இவனே - இவன்தான்; புலிநிறக் கவசம் - புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகு கருவி பொலிந்த; பூம்பொறி சிதைய - கொளுத்தற; எய் கணை கிழித்த - எய்த அம்புகள் போழப்பட்ட; பகட்டெழில் மார்பின் - பரந்துயர்ந்த மார்பினையுடைய; மறலி யன்ன களிற்று மிசை யோன் - கூற்றம் போன்ற களிற்றின் மேலோன்; களிறு - இக்களிறு தான்; முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் - கடலின் கண்ணேயியங்கும் மரக்கலத்தை யொப்பவும்; பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் - பல மீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும்; சுறவினத் தன்ன வாளோர் யொப்ப - சுறவின் இனத்தை யொத்த வாண் மறவர் சூழ; மரீஇயோர் அறியாது - தன்னை மருவிய பாகரை யறியாது; மைந்து பட்டன்று - மதம்பட்டது; நோயிலனாகிப் பெயர்கதில் அம்ம - இவன் நோயின்றிப் பெயர்வானாக; பழனம் -வயலிடத்து; மயில் உகுத்த பீலி - மயில் உதிர்த்த பீலியை;கழனி யுழவர் - ஆண்டுள்ள உழவர்; சூட்டொடு தொகுக்கும் -நெற் சூட்டுடனே திரட்டும்; கொழுமீன் - கொழுவிய மீனையும்; விளைந்த கள்ளின் - |