பக்கம் எண் :

366

 
 குறுக லோம்புமின் றெவ்வி ரவனே
10சிறுகண் யானை வெண்கோடு பயந்த
 ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து
நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல்
பண்மை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி
நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க்
15கிரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
 விசைத்தெறி கூடமொடு பொரூஉம்
உலைக்கல் லன்ன வல்லா ளன்னே.  
(170)

     திணை: வாகை. துறை: வல்லாண்முல்லை; தானைமறமுமாம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

     உரை: மரை  பிரித் துண்ட நெல்லி வேலி - மரையாவாற்
பிரித்துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியை யுடைத்தாய்; பரலுடை
முன்றில்   - அதனது   விதையாகிய   பரலுடைத்தாகிய
முற்றத்தினையுடைய; அங் குடிச் சீறூர் - அழகிய குடியையுடைய
சிறிய வூரின்கண்; எல் அடிப் படுத்த - பகற்பொழுதெல்லாம்
வேட்டையாடித் திரிந்த; கல்லாக் காட்சி வில்லுழு துண்மார்
நாப்பண் - கல்வியில்லாத  காட்சியையுடைய  வில்லாகிய  ஏரா
லுழு துண்பாருடைய  நடுவே; ஒல்லென - ஒல்லென்னு  மோசையை
யுடைத்தாக; இழி பிறப்பாளன் - இழிந்த பிறப்பினையுடைய
புலையன்; கருங்   கை  சிவப்ப - தனது  வலிய கை சிவப்ப;
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி - வலியான் முடுக்கிக்
கொட்டும் வலிய கண்ணையுடைய அச்சத்தைச் செய்யும் துடி; புலி
துஞ்சு நெடு வரைக்  குடிஞையோடு  இரட்டும் - புலி    
கிடக்கும்    நெடிய மலையின்கண் பேராந்தையோடு கூடி
யொலிக்கும்; மலை கெழு நாடன்  கூர்  வேல்  பிட்டன் -
மலைபொருந்திய    நாட்டை யுடையனாகிய கூரிய வேலையுடைய
பிட்டனை; குறுகல் ஓம்புமின் தெவ்விர் - அணுகுதலைப்  
பாதுகாமின்    பகைவீர்; அவனே - அவன்தான்; சிறுகண் யானை
வெண்கோடு பயந்து ஒளி திகழ் முத்தம்- சிறு கண்ணையுடைய
யானையினது வெளிய கோடு தரப்பட்ட ஒளி விளங்கு முத்தத்தை;
விறலியர்க்கு ஈத்து - விறலியருக்குக் கொடுத்து; நார்    பிழிக்  
கொண்ட    வெங்கள்    தேறல் - நாரைப் பிழிந்துகொள்ளப்பட்ட
விரும்பத்தக்க  கள்ளாகிய தெளிவை; பண்ணமை நல் யாழ்ப் பாண்
கடும்பு அருத்தி - பண் பொருந்தின நல்ல யாழினையுடைய பாணர்
சுற்றத்தை நுகர்வித்து; நசைவர்க்கு மென்மை யல்லது - இவ்வாறு
தன்பால் பரிசில் நச்சி