பக்கம் எண் :

385

 

இனிவரும் நாட்களினும் இந்நலன்இடையறாது உளதாக வேண்டுமே
யென்றும் எழும் நினைவால் இரக்க   உண்டாகலின், “காணாது கழிந்த
வைகல் காணா”என்றும்,    “என் நெஞ்சம் வழிநாட் கிரங்கும்” என்றும்
கூறினார்.   இது, “வாராக்காற் றுஞ்சா வரிற் றுஞ்சா ஆயிடை,
ஆரஞருற்றன கண்”(குறள்-1179) என்றாற்போல    ஆராமை  
குறித்துநின்றது. சாயல், மென்மை, இஃது ஆண்பாற்கும் உரித்தென்பது,
“நீரினும் இனிய சாயற் பாரிவேள்”(புறம்-105) என்பதனா லறியப்படும்.


               177. மல்லிகிழான் காரியாதி

     காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது
சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளத்தோர்    ஊர். இவன் வேளாண்குடி
முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ்
பெற்றவன். சோழன்  குளமுற்றத்துத் துஞ்சிய  கிள்ளிவளவனையும் பூஞ்
சாற்றூர்ப்பார்ப்பன் விண்ணந்தாயனையும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட
ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச்
சென்று அவனது    கைவண்மையைக்    கண்களிப்பக்     கண்டார்.
அங்கே இம்மல்லிகிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல
அரண்களிலிருந்துஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து
புளிச்சுவையை  விரும்பிக் களாப்பழத்தையும்    துடரிப் பழத்தையும்  
விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து
குடநாட்டு    மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய
நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும்
பனையோலையில் வைத்து விடியற் காலையில் உண்பதையும் கண்டனர்.
உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர் வேந்தர் நெடுநர்
முன்னே நின்று கண் சிவக்க நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில்
பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும்,
இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்; “மன்னர்
ஒண்சுடர் நெடுநகர், வெளிறு கண்போகப் பன்னாள் திரங்கிப் பாடிப்பெற்ற
பொன்னணி யானை பெரும்புலர் வைகல் சீர்சா லாது”என்ற கருத்தமைத்த
இப் பாட்டைப் பாடி, இதன்கண் மேலே தாம் கண்ட காட்சியைச்
சொல்லோவியம் செய்துள்ளார்.

 ஒளிறுவாண் மன்ன ரொன்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமரெனின் யாவரும் புகுப வமரெனில்
5திங்களு நுழையா வெந்திரப் படுபுழைக்
 கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த
குறும்பல் குறும்பிற் றதும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்க ணாடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
10மட்டற னல்யாற் றெக்க ரேறிக்