| கருங்கனி நாவ லிருந்துகொய் துண்ணும் பெரும்பெய ராதி பிணங்கரிற் குடநாட் டெயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப் பைஞ்ஞிணம் பொருத்த பசுவெள் ளமலை | 15 | வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய | | இரும்பனங் குடையின் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே. (177) |
திணையுந் துறையு மவை. மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் - விளங்கியவாளையுடைய வேந்தரது ஒள்ளிய விளக்கத்திணையுடைய உயர்ந்த கோயிற் கண்; கண் வெளிறு போக - கண்ணொளி கெட; பன்னாள் திரங்கி - பன்னாள் நின்றுலர்ந்து; பாடிப் பெற்ற பொன்னணி யானை - அவ்விடத்துப் பாடிப் பெற்ற பொற்படை யணிந்த யானை; தமரெனின் யாவரும் புகுப - தமக்குச் சிறந்தாராயின் எல்லாரும் எளிதிற் புகப் பெறுவர்; அமரெனின் திங்களும் நுழையா - போராயின் திங்களாலும் நுழையப்படாத; எந்திரப் படு புழை - பொறிகளைப் பொருந்திய இட்டிய வாயிலை யுடைத்தாய்; கள் மாறு நீட்ட - கள்ளை யொருவர்க்கொருவர் மாறு மாறாக நீட்டிட; நணி நணி இருந்த குறும் பல் குறும்பின் - ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த குரிய பல அரணின் கண்ணேயிருந்து; ததும்ப வைகி - அக்கள்ளை நிரம்பவுண்டு காலங் கழித்து; புளிச் சுவை வேட்ட செங்கண் ஆடவர் - பின்னைச் செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய மதத்தாற் சிவந்த கண்ணையுடைய ஆண் மக்கள்; தீம் புளிக் களாவொடு துடரி முனையின் - இனிய புப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப் பழத்தைத் தின்று வெறுப்பின்; மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி - கரை மரத்துப் பைந்தேன் அரித் தொழுகுகின்ற நல்ல கான் யாற்றினது மணற்குன்றின் கண்ணே யேறி; கருங் கனி நாவல் இரந்து -கொய்துண்ணும் கரிய நாவற்பழத்தைப் பறித்து இருந் துண்ணும்; பெரும் பெயர் ஆதி - பெரிய பெயரையுடைய னாகிய ஆதியினது; பிணங் கரில் குட நாட்டு - பிணங்கிய அரில் பட்ட காட்டடையுடைய குடநாட்டின்கண்; எயினர் தந்த எய்ம்மான் எறி தசை - மறவர் எய்து கொடு வரப்பட்ட எய்ப் பன்றியினது கடியப்பட்ட தசையினது; பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை - செவ்வியையுடைய நிணமிக்க புதிய வெண்சோற்றுக் கட்டியை; வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய - வருவார்க்கெல்லாம் ஒப்பக் கொடுவந்து சொரிய; இரும் பனங்குடையின் மிசையும் பெரிய பனையோலையான் இயன்ற குடையிலே நுகரும்; |