பக்கம் எண் :

4

 

நூல்

2. சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன்

     பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் சேரமன்னருள் ஒருவன் இவனை
உதியனென்றும், உதியஞ்சேர லென்றும், உதியஞ்சேரல னென்றும்
மாமூலனாரும் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடுவர்.
பாண்டவரும் துரியோதனனாதியோரும் பொருத காலத்து இரு திறத்துப்
படைகட்கும் பெருஞ்சோறிட்டு இச்சேரமான் நடுநிலைபுரிந்தானென்பது
பற்றி, இவன் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனப்படுகின்றான்.
முரஞ்சியூ ரென்பது இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் முடி நாகனாரது
ஊராகும். இவர் தலைச்சங்கப் புலவருள் ஒருவரென இறையனார்
களவியலுரை கூறுகிறது. நாகனார் என்பது பிற்காலத்து ஏடெழுதினோரால்
நாகராயர் எனப் பிறழ எழுதப்பட்டுவிட்டது.

     இப்பாட்டில், இச்சேரமான், நிலம், விசும்பு, காற்று, தீ, நீர், என்ற
ஐம்பெரும்பூதங்களின் இயற்கைபோலப் பொறை, சூழ்ச்சி, வலி, தெறல்,
அளியென்ற ஐந்தும் உடையவன் என்றும், பாண்டவராகிய ஐவரும்
துரியோதனன் முதலிய நூற்றுவரும் பொருதகளத்தில் அவர் படைக்குப்
பெருஞ்சோறு வரையாது கொடுத்தவன் என்றும், மேலைக்கடற்கும்
கீழைக்கடற்கும் இடையிற் கிடக்கும் நாடு முற்றும் இவற்கேயுரியது என்றும்,
இமயமும் பொதியமும் போல இவன் நடுக்கின்றி நிலை பெறுதல்
வேண்டுமென்றும் கூறி வாழ்த்துகின்றார்.


 மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
5. தீமுரணிய நீரு மென்றாங்
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலும் அளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
10. வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
15. ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகலிருளினும்