| நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி |
20 | நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச் |
| சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே. (2) |
திணை - பாடாண்டிணை ; துறை - செவியறிவுறூஉ;
வாழ்த்தியலுமாம். சேரமான் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனை
முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது.
உரை : மண் திணிந்த நிலனும் - அணுச்செறிந்த நிலனும்;
நிலனேந்திய விசும்பும் - அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்; விசும்பு
தைவரு வளியும் - அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும்; வளி
தலைஇய தீயும் - அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும்; தீ முரணிய
நீரும் என்று - அத்தீயோடு மாறுபட்ட நீருமென; ஐம்பெரும் பூதத்து
இயற்கை போல - ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை போல;
போற்றார்ப் பொறுத்தலும் - பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப்
பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் - அப்பிழை பொறுக்குமளவல்ல
வாயின் - அவரையழித்தற் குசாவும் உசாவினது அகலமும்; வலியும் -
அவரையழித்தற் கேற்ற மனவலியும் சதுரங்கவலியும்; தெறலும் -
அவ்வாற்றால் அவரை யழித்தலும்; அளியும் உடையோய் - அவர்
வழிபாட்டால் அவர்க்குச் செய்யும் அருளு முடையோய்; நின் கடல்
பிறந்த ஞாயிறு - நினது கடற்கண் தோன்றிய ஞாயிறு; பெயர்த்தும் -
பின்னும்; நின் வெண்டலைப் புணரிக் குடகடல் குளிக்கும் - நினது
வெளிய தலைபொருந்திய திரையையுடைய மேல்கடற்கண்ணே மூழ்கும்;
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந - புதுவருவாய் இடையறாத
வூர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே; வானவரம்பனை -
வானவரம்ப; பெரும-; நீ-; அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
- அசைந்த தலை யாட்ட மணிந்த குதிரையையுடைய பாண்டவர்
ஐவருடனே சினந்து; நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் - நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந்
தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்; பொருது
களத்தொழிய - பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும்;
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் - பெருஞ்
சோறாகிய மிக்க வுணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்;
பா அல் புளிப்பினும் - பால் தன்