பக்கம் எண் :

6

 

இனிமை யொழிந்து புளிப்பினும்; பகல் இருளினும் - ஞாயிறு தன்
விளக்கமொழிந்து இருளினும்; நாஅல் வேதம் நெறி திரியினும் - நான்கு
வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும்; திரியாச் சுற்றமொடு -
வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு; முழுது சேண்
விளங்கி - ஒழியாது நெடுங்காலம் விளங்கி; நடுக்கின்றி நிலியர் -
துளக்கமின்றி நிற்பாயாக; அடுக்கத்து - அரைமலையின் கண்; சிறுதலை
நவ்விப் பெருங்கண் மாப்பிணை - சிறிய தலையையுடைய
மறிகளையுடையவாகிய பெரியகண்ணையுடைய மான்பிணைகள்; அந்தி
அந்திக்காலத்தே; அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில்
துஞ்சும் - அந்தணர் செய்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்
முத்தீயாகிய விளக்கின் கண்ணே துயிலும்; பொற்கோட்டு இமயமும்
பொதியமும் போன்று - பொற் சிகரங்களையுடைய இமயமலையும்
பொதியின் மலையும் போன்று - எ-று.

     குளிக்கும் நாடென இயையும். குளிக்கும் நாடென இடத்து நிகழ்
பொருளின் தொழில் இடத்துமேல் நின்றது. நீயோ, ஓ: அசைநிலை, அன்றி,
இதனை வினாவாக்கி, ஞாயிறு குளிக்கு மென்பதனை முற்றாக்கி வானவரம்ப
னென்பதனை அவ்வினாவிற்குப் பொருளாக்கி உரைப்பாருமுளர். முத்தீயாவன:
ஆகவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி. ஆங்கும் அத்தையும்
அசைநிலை, வானவரம்பனை: ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது. நிலந்
தலைக்கொண்ட வென்பதற்கு நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட் சூடிய
வெனினு மமையும்.

     போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களையுடையோய், பொருந,
வரையாது கொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ புளிப்பினும் இருளினும்
திரியினும் இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி
நிற்பாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. போற்றார்ப் பொறுத்தல்
முதலாகிய குணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின், பூதங்களின்
அடைவு கூறாராயினார்.

     இதனாற் சொல்லியது தன்கடற் பிறந்த ஞாயிறு தன்கடற் குளிக்கும் நாட
னாதலால் செல்வமுடையையாக வென்று வாழ்த்த வேண்டுவதின்மையின்
நீடுவாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று.

     விளக்கம்: குளிக்குமென்னும் பெயரெச்சவினை ஞாயிற்றின்
வினையாயினும், ஞாயிற்றுக்கும் நாட்டுக்கு முள்ள தொடர்பு இடத்துநிகழ்
பொருளுக்கும் இடத்துக்கு முள்ள தொடர்பாவது பற்றி, குளிக்கும் நாடென
முடிந்தது. இது பற்றியே “குளிக்கும் நாடென இடத்து நிகழ் பொருளின்
தொழில் இடத்துமேல் ஏறி நின்ற” தென்றார். வானவரம்பனை,
வானவரம்பவென முன்னிலையாய்க் கொள்ளாது, நீயோ வானவரம்பனை?”
என வினாவாக்கிக் கூறுவதுமுண்டென்றற்கு, வினாவாக்கி யுரைப்பாரு முளர்
என்றார். சூதுபொருது நிலத்தை முன்பே கவர்ந்து கொண்டமையின், நிலம்
தலைக்கொண்ட வென்பதற்கு நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட எனவுரை
கூறினார். நிலந்தலைக்கொண்ட தும்பை யென்பதற்கு, நிலத்தைக்
கைக்கொள்ளுதல் காரணமாகத் தலையிற் சூடிக்கொண்ட தும்பை என்றும்