| கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்வெயில் புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் |
5. | வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் |
| தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத் துளங்கியலாற் பணையெருத்திற் பாவடியாற் செறனோக்கின் ஒளிறுமருப்பிற் களிறவர |
10 | காப்புடைய கயம்படியினை |
| அன்ன சீற்றத் தனையை யாகலின் விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார் ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார் |
15. | நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய |
| வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில் நற்பனுவ னால்வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண் |
20. | வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி |
| யூப நட்ட வியன்களம் பலகொல் யாபல கொல்லோ பெரும வாருற்று விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற் பாடினி பாடும் வஞ்சிக்கு |
25. | நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. (15) |