பக்கம் எண் :

412

 

அதற்கு மாறுபடவும், வேறுபடவும் வரும் பொருள் எத்துணைச் சீரிதாயினும்
வேண்டாத  விறலும் உடையராதலைக்  கண்டான். கேடு நேர்ந்த காலத்து
அதற் கேதுவாயிருந்தவரை ஆராய்ந்த வழி, அவர்கள், ஏனையர்போல
உள்ளத் துயர்வும் கடைப்பிடியும் விறலும் இலராயினும், உழைப்பார் உழைக்க
அவர்தம்  உழைப்புவழி  வரும்  ஊதியத்தை  நேர்  முகமாகவோ
மறைமுகமாகவோ சிறுகச் சிறுகத் தாம் பறித்துக்கொள்ளும் பண்பும்
அதற்கேதுவாகிய  குறுகிய  வுள்ளமும், தன்னலச் சூழ்ச்சியும், ஒன்று
உற்றவிடத்துத்  தம்மை  விற்றுவிடத்தக்க  கீழ்மையும் உடையராதலை
யறிந்தான்.  உடனே  இக்  கீழோரை   விலக்கி ஏனையோரைத் தழீஇக்
கொள்ளுமிடத்து இப் பாட்டினைப் பாடியுள்ளான். இதன்கண் எலிபோலும்
மனமும்  தாமுடையவற்றை  மேலுமேலும்  பெருக்கிக் கொள்ளும்
உள்ளமுமுடையாருடைய கேண்மை எமக்கு வேண்டா; தான் செய்யும்
வேட்டத்தின்கண் மிக்க பசியுற்ற காலையும் இடம் வீழ்ந்ததை விடுத்து
வலம் வீழ்ந்ததையே யுண்ணும் விறல் படைத்த புலிபோலும் மனமும்
உரனமைந்த உள்ளமும் உடையவர் நட்புக்கலந்த வாழ்வே வேண்டுவதாம்
என்று இசைத்துள்ளான்.

 விளைபதச் சீறிய நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டளை மல்க வைக்கும்
எலியமுயன் றனைய ராகி யுள்ளதம்
வளன்வலி யுறுக்கு முளமி லாளரொ
5டியைந்த கேண்மை யில்லா கியரோ
கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென
அன்றவ ணுண்ணா தாகி வழிநாட்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
திருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும்
15புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத்
துரனுடை யாளர் கேண்மையொ
டியைந்த வைக லுளவா கியரோ
    (190)

     திணையும் துறையு மவை. சோழன் நல்லுருத்திரன் பாட்டு.

     உரை: விளை   பதச்   சீறிடம் நோக்கி - விளைந்த
செவ்வியையுடைய சிறிய இடத்தைப் பார்த்து; வளை கதிர் வல்சி
கொண்டு அளை மல்க வைக்கும் - வளைந்த கதிராகிய உணவைக்
கொண்டு முழையின்கண்ணே நிறைய வைக்கும்; எலி முயன்
றனையராகி - எலி முயன்றாற்போலும் சிறிய முயற்சியராகி; உள்ள
தம் வளன் வலியுறுக்கும் உளமி லாளரொடு - உள்ள தம்முடைய
செல்வத்தை நுகராது இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி யில்லாருடன்;
இயைந்த கேண்மை இல்லாகியர் - பொருந்திய நட்பு இல்லையாக;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந் தென - தறுகண்மையை யுடைய
கேழலாகிய பன்றி தனது இடப்பக்கத்தே பட வீழ்ந்ததாக;