| இந்நாளில், அச்செருக்கு மிகத் தடித்திருப்பதில் வியப்பில்லை யன்றோ? இதனால் நம் வடமவண்ணக்கரான பேரிசாத்தனார் மனம் புழுங்கி இப்பாட்டைப் பாடி விடை பெறலானார். இதன்கண், வேந்தே! ஆலமர் கடவுள் போலும் நின் செல்வத்தைக் கண்டு பாராட்டி, நின் கற்புடைய மனைவி பயந்துள்ள மக்கள் பொலிக என வாழ்த்தி, நீ தரும் பரிசில்மே லெழுந்த வேட்கையால் கனவினும் நனவினும் அரற்றும் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு இன்று கண்டேன்; இனி விடைபெற்றுக் கொள்கின்றேன்; நின் கண்ணி வாழ்க; தமிழக முழுதும் வென்று பெரும் பொரு ளீட்டிய நின்னைப் போலும் நின் மக்கள், பகைவர் வருந்தவென்று அவர் செல்வம் முற்றும் கொணர்ந்து தொகுத்த நின் முன்னோர் போலக் கண்ணோட்ட முடையராகுக. ஆண்டும் நாளும் மிக்குக் கடல் நீரினும், நீர் கொழிக்கும் மணலினும், நீரைப் பொழியும் மழைத் துளியினும் பெருக; நின் மக்கள் பெறும் மக்களைக் காணுந்தோறும் செல்வமும் புகழும் சிறந்து நீ நீடு வாழ்க; யான் சேய நாட்டிற்குச் செல்கின்றேன்; நின் அடி நிழற் கண் பழகிய யான் வானம்பாடி போல நின் புகழை நச்சி யிருப்பேன்; என்னை மறவா தொழிவாயாகஎன்று குறித்திருப்பது மிக்க உருக்கமானது.
| அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக் கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க் | 5 | கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தித் | | திண்டே ரண்ண னிற்பா ராட்டிக் காதல் பெருமையிற் கனவினு மரற்றுமென் காமர் நெஞ்ச மேமாந் துவப்ப ஆலமர் கடவு ளன்னநின் செல்வம் | 10 | வேல்கெழு குருசில் கண்டே னாதலின் | | விடுத்தனென் வாழ்கநின் கண்ணி தொடுத்த தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப் பணித்துக்கூட் டுண்ணுந் தணிப்பருங் கடுந்திறல் நின்னோ ரன்னநின் புதல்வ ரென்றும் | 15 | ஒன்னார் வாட வருங்கலந் தந்து நும் | | பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின் முன்னோர் போல்கிவர் பெருங்கண் ணோட்டம் யாண்டு நாளும் பெருகி யீண்டுதிரைப் பெருங்கட னீரினு மக்கடன் மணலினும் | 20 | நீண்டுயர் வானத் துறையினு நன்றும் | | இவர்பெறும் புதல்வர்க் காண்டொறு நீயும் புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி |
|